பக்கம்:மீனோட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு 47 இருந்தால் என்ன, நான் என் சுண்டு விரலுக்குப் போட்டுண் டுட்டுப் போறேன். அவளுக்குக் கொட்டாங்கக்சி மோதிரம் இல்லாட்டாத்தான் என்ன? நல்ல காலம் வரப்போ நல்ல மோதிரமே போட்டுண்டுட்டுப் போறாள்-' தன் அற்ப சந்தோஷத்தில் தன்னை இழந்து அவள் திளைத்துக் கொண்டிருக்கையில், அவள் மேல், அவனுள் மாபெரும் சீற்றம் ஒன்று திரள்வது உணர்ந்தான். தனியாக அவளென்று அவள் மேல் கூட இல்லை. இப்போது அவள், அவளாகப் படவில்லை. தன் அவல வாழ்க்கையின் அவ மானச் சின்னமாக, ஏன், காரணமாகக் கூட அவளைக் கன் டான். ஊழ்வினையோ, அல்ல இப் பிறப்பின் செய்வினை யின் விளைவோ, தன் பாழுக்கும் தவறுக்கும் பழிசுமத்தப் பிற ரைத் தேடுவது மனித இயல்பு என்று அவனுக்கே தெரிந்திருந் தாலும்- இவ்வளவு மரைலுரஸ்டுடன் விதி என்னைப் பிணைத்திருந்தால், என்வாழ்வு பின் எப்படியிருக்கும்? அவள் அப்படியிருப்பானேன், இவள் இப்படி-’’ வெடுக்கென அவள் கையிலிருந்து பிடுங்கியெறிந்தான். அது சுவரோரம் மூலையில் எங்கோ இருளில் க்ளிங் அவன் மேல் வைத்த விழி கொட்டவில்லை. முகமும் மாறவில்லை. அதில் கோபமா, வருத்தமா, அதிர்ச்சியா? எதுவுமே அறியமுடியவில்லை, அவனைப் பார்த்துக்கொண்டே யிருந்தாள். துடைத்துப் பெருக்கி வைத்தாற்போல் வெறிச் சிட்ட முகம் அதில் காங்கையடிக்கும் விழிகள். 'என்னடி முறைக்கறே? கையை ஓங்கினான். இப்பவே எனக்கு மூங்கிலுக்கு அளவெடுக்கறையா?” 'அவ்விழிகள் மாறவில்லை. இமைகள் அசையவில்லை. கண்ணிர் கூடப் பெருகவில்லை. வரண்ட பெரும் வண்டு விழி கள். வெள்ளை விழியில் கறுப்புமணி அப்படியே உறைந்து போயிருந்தது, அவன் கோபம் உச்சி மண்டைக்கு ஏறிவிட்டது. செவி கள் ஆவிகக்கின. பளாரென்று அவளைக் கன்னத்தில் அறைத் தான். அவன் ஆயுசுக்கே அவளுடன் வாழ்க்கையின் முதல் தரம் ஓ மை காட்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/48&oldid=870395" இலிருந்து மீள்விக்கப்பட்டது