பக்கம்:மீனோட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு 49 காப்போல. ஆனால் இதுகள் கொள்ளிகள் கண்ணுக்கு படற தில்லே. ஆனால் ஸார் நீங்கள் நினைச்சமாதிரி. மாமிக்கு இல்லே.” 'அப்பாடா!' பெருமூச்சு விட்டான். இருவரும் எழுந்து கதவண்டை சென்றதும் டாக்டர். 'விார் ஒண்னு மறந்துட்டேன். ஜஸ்ட் எ மினிட். உங்களுக்கு ஒண்ணுமில்லேம்மா. நீங்க வெளியிலே சோபாவிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்க ரெஸ்டுலே. அவன் டாக்டர் அறையி லிருந்து வெளியே வந்தபோது, அவள் தன் சுண்டு விரலில் மோதிரத்தைத் திருகிக் கொண்டிருந்தாள். தனி ரகஸ்ய உவகையில் அவள் விழிகள் ஒளிவீசின. எப்பவுமே அவளிடம் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அதன் உண்மை இன்றுதான் அவனுக்கு உறைத்ததோ? 'வா, சுமதி போகலாம்’ வியப்பில் நிமிர்ந்தாள். அவர் வாயில் தன் பெயர் கேட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. 'இன்னிக்கு இனிமேல் போய் எங்கே சமைக்கிறது? உனக்கு எப்போத்தான் ரெஸ்ட் இருக்கு? இம்பாலாவில் குழித்தட்டில் சுத்தி கிழங்கு, டால், கத்தரிக்காய்ச் சட்டினி நடுவில் மண்டை மண்டையா உப்பல் பூரி அடுத்து மஸாலாபால் கூடவே ரேடியோ கிராமில் உன் விருப்பம் கிஷோர் குமாரின் ஜூலி...” 'ஏதேது. ஈதென்ன ப்ரியத்தினாலேயே மேலே மேலே நீங்கள் இப்படி அடிச்சேள்னா, நான்செத்தே போயிடுவேன். இது உங்களுக்குப் பாந்தமாயுமில்லை-முதலில் நீங்கள் உடம்பு சரியாயிருக்கேளோ? உங்களுக்கேன் முகம் வெளி றிட்டிருக்கு? 'இருக்கா என்ன?’ கைக்குட்டையால் முகத்தை அழுத் தித் தேய்த்துக் கொண்டான். இங்கேயே விளக்கு பவரா யிருக்கு. அதனால் கண்ணுக்கு அப்படிப் பட்டிருக்கலாம்” X X x Х பின்னால் கைகட்டிய வண்ணம், அத்திம்பேர் கூடத்தில் மாட்டியிருந்த பழைய போட்டோக்கள் சுவாமி படங்களைப் பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளறையில் ஒரே இரைச்சல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/50&oldid=870401" இலிருந்து மீள்விக்கப்பட்டது