பக்கம்:மீனோட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசடு 51 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவள் உடவில் ஒரு உதறல் கண்டது. "ஆமாம்” அவர் தலை நிமிர்ந்தார், சில சமயங்களில் லக்ஷத்தில் ஒரு சான்ஸ்-இதுபோல் நேர்ந்துவிடுகிறது: பித்தளைக்கும் தங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல், கண்ணாடித்துண்டோடு வைரம் எப்படிக் கலந்தது? கடவுளுக் குத்தான் அற்புதம். தவிர இது பூமியில் உற்பத்தியாகும் பொருள். எந்த ஜலத்தில் எந்த மணலோடு என்றைக்கு அடித்து வந்து எங்கே புதைந்து கிடந்ததோ?’ குப்பையிலே மாணிக்கம்னு பழமொழியே இருக்கு”; சிரித்தாள். “எப்படி: ஏது, எதனால்? நம்மால் சொல்லமுடியாது. கடவுள் சித்தம், இயற்கையின் விளையாட்டு, எப்படியிருந்தால் என்ன? அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, மறுபடியும் அந்த சிரிப்பு. சிரிப்பா கொக்கரிப்பா? உதட்டோரம் ஒரு வெற்றிப் புன்னகை. இது இனிமே என்னிடமிருப்பதே உங்களுக்கு செளகரியம் என்று நினைக்கிறேன். கடைக்குப் போய் சோதிக்கனும்; முழு மதிப்புத் தெரிய. ஆனால் நமக்குள் என்ன? பின்னால் பேசிக்கலாம். இப்போ கையிலிருக்கறதை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்ரும் செலவு இருக்கு. நான் வரேன்.' அவன் திகைப்பூண்டு மிதித்து நின்றான். அவர் அவன் கையில் திணித்த கற்றை நோட்டுகளுடன். அத்தனையும் பச்சை. இனிமேலும் வரப்போறது. காசு படைத்தவர்களுக்கு நினைத்தவிடத்தில் நினைத்த காரியத்தை நினைத்தபடி எப்படி முடித்துக்கொள்ள முடிகிறது பார்த்தையா? ஏதாவது மரியாதைக்குக்கூட தரேளா? என்று கேட்டானா மனுஷன்? கையிலிருந்து பிடுங்கிக் கொண்டே போயிட்டான். இப்பவே இவன், மோதிரத்தின் உண்மை விலையைக் கொடுப்பான் என்று என்ன நிச்சயம்? அட போய்யா? நீயுமாச்சு, உன் காசு மாச்சு, அவள் நினைப்பாய் இது எங்க கிட்டேயே இருந்து விட்டுப் போகட்டும்னு சொல்லும் நிலைமையில் நான் இருக்கிறேனோ? இந்த நிமிஷம் வரை நிலைமை இப்படி மாறப் போறது என்று எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/52&oldid=870405" இலிருந்து மீள்விக்கப்பட்டது