பக்கம்:மீனோட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மீனோட்டம் தெரியுமா? ஆனால் மாறினதும் இந்த நிமிஷமே, என் மனமும் எப்படிக் கெட்டுப் போச்சுப் பார்த்தையா? இதற்கெல்லாம் காரணம் யார்? ஆளைப்பார், உருண்டையாய், தஞ்சாவூர் செட்டிப் பொம்மை மாதிரி! அவர் மேல் அவனுக்குப் பயங்கரக் கரிப்பு எடுத்தது. அவர் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். வயிற்றைக் குமட்டிற்று. 'அத்திம்பேரே! அத்திம்பேரே!! அவசரமாய்ப் பத்மா வின் குரல். அதில் பயம் தொனித்தது; திடுக்கிட்டுத் திரும்பினான். "என் மோதிரம் என் மோதிரம். அபயா அவன் முழங்கை யைக் கட்டிக் கொண்டு தொங்கினாள், "சீ சனியனே விடு கையை உதறிக் கொண்டு அவன் உள்ளே விரைந்தான், அபயா தொப்பென்று விழுந்தாள். எழுந்து செளகரிய மாகத் தரையில் சப்பளங்கொட்டி உட்கார்ந்து, கண்ணைக் கசக்கிக் கொண்டு பாட்டு வைக்க ஆரம்பித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/53&oldid=870407" இலிருந்து மீள்விக்கப்பட்டது