பக்கம்:மீனோட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி விடு 55 ஒவ்வாதென்றே நினைக்கிறேன்'- என்றான். . "ஆ, பார்த்தாயா, கவிதையற்ற பேச்சு ஆயினும் அவ்வாக்கில் எவ்வளவு அர்த்த புஷடி பளிச் சென்றிருக்கிறது: பளிங்கு போல் இருக்கிறது. சரி, உன்னுடன் சண்டையிட எனக்கு இப்பொழுது தென்பில்லை. அங்கேபோய் ஆகாரத் துக்கு வழி தேடுவோம்... ஆனால்- உனக்கு .. கற்பனையே ஆகாரம் என்றால்... ரொம்ப உத்தமமாய்ப் போயிற்று...” 'இல்லை, நான் ஆகாரமும் சாப்பிடுவதுண்டு...' 'சரி, வா...போய் இரப்போம்...” கதவு பூட்டியில்லை, கதாசிரியன் இருமுறை கதவை மெல்லத் தட்டிப் பார்த்தான். பதில் இல்லை. கொஞ்சம் அழுத்தித் தள்ளவும், கதவு க்ரீச்” என்று கத்திக் கொண்டு திறந்தது. இருவரும் உள்ளே புகுந்தார்கள். வீடு சற்று நீள வாக்கில், முதலில் ரேழி, பிறகு முற்றம், அடுத்தாற் போல் கொல்லைப் புறத்துக்குப் போகும் வழியாய் விரிந்தது. முற்றத்தை ஒட்டி ஒடும் தாழ்வாரத்தின் பக்கமாய் ஒருகூடம். கூடத்தில் ஒரேவோர் அறை. வீடே அவ்வளவு தான். அறை வாசற்படிக்கு மேல், சுவரில் ஒரு புகைப் படம் மாட்டியிருந்தது. அவ்வறைதான் சமையலறை என்று, பார்க்கும் பொழுதே தெரிந்தது. அறையின் மூலைகளில் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கிய பானைகளும், கரியேறிய சுவருக்குக் கீழே அடுப்பில் சொருகிய வண்ணம் அவிந்து கிடக்கும் கொள்ளிக் கட்டையொன்றும் காணப்பட்டன. எனவே, அது சமைய லறைதான் என்பதில் சந்தேகமென்ன? 'ஒருத்தரையும் காணவில்லையே' என்றான் கவி. 'கொல்லைப் புறந்தில் இருப்பார்களோ, என்னவோ?...” சரி, வா, போய்ப்பார்ப்போம்...” கொல்லைப் புறக் கதவு மூடியிருந்தது. கதவின் சந்து வழி யாய்க் கொல்லை மரங்களின் பச்சை தெரிந்தது, கொல்லையில் ஒருபழங்கிணறு. அதன் இடிந்த கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/56&oldid=870413" இலிருந்து மீள்விக்கப்பட்டது