பக்கம்:மீனோட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மீனோட்டம் பிடிச் சுவரின் மேல், பாதி உள்ளும் பாதி வெளியுமாய் ஒரு தாம்புக் கயிறு தொங்கியது. தவிர, ஒரு மாட்டுத் தொழுவ மும் அதில் வைக்கோற் போரும் அதன் பக்கத்தில் ஒரு பகவும் கன்றும் இருந்தன. இவையன்றி ஐந்தாறு தென்னை, நாலைந்து வாழைக் கன்றுகள். ஒர் அவரைப் பந்தல், முற்றி உதிர்ந்த ஒரு தென்னம்பாளை. ஆனால் அங்கே ஒருவருமில்லை. கவி அலறத் தொடங்கினான். 'சரி, இப்போது என்ன செய்வது? தன்னந் தனியாய் அகப்பட்டுக் கொண்டேனே, இந்த நிர்மானுஷ்யமான காட்டிலே...' 'இந்த நல்ல தங்காள் பாட்டுப்பாடாதே...நீ தன்னந் தனிமையில்லை...நானும் இங்கே இருக்கிறேன்!... இதோ ஒரு மாடு இருக்கிறது...வீடு இருக்கிறது’ 'மனுஷனைக் காணோமே!...” "எங்கேயாவது வெளியே போயிருப்பான்...” 'என்ன இவ்வளவு அதிகாலையிலேயா?” "பின்னே என்ன? பட்டணத்தில், முதுகில் வெயிலடிக்கும் வரையில் நீ தூங்குகிற மாதிரி நினைத்துக் கொண்டாயோ?” பிறகு, இருவரும் மெளனமாயிருந்தார்கள். கிழக்கு நன்றாய்ச் செவந்து, சூரியனின் முதற் கிரணங்கள் வீசத் தலைப்பட்டன. ஆனால், இன்னும் ஆள் சந்தடியில்லை. திடீரென்று கதாசிரியன் தீர்மானத்துடன் எழுந்திருந் தான். "என்ன செய்யப் போகிறாய்? "ஆகாரத்துக்கு ஏதாவது வழி தேடப் போகிறேன். சும்மா இருந்தால், வயிறு கேட்குமா? 'வாஸ்தவம்’ கதாசிரியன் கவிஞனை ஒரு மாதிரியாய்ப் பார்த்தான். 'உன்னைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை...” என் றான்; சாவதானமாய். உன்னைப் போல் எத்தனையோ பேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/57&oldid=870414" இலிருந்து மீள்விக்கப்பட்டது