பக்கம்:மீனோட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு 57 வழிகளைப் பார்த்திருக்கிறேன். உன் முகத்தில் சோம்பேறிக் களை கூத்தாடுகிறது. நீ எல்லாவற்றிற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு சும்மா இருந்து விட்டு ஊனுக்கு மட்டும் முந்தி விடலாம் என்று நினைக்காதே, (கவிஞனின் முகத்தில் அசடு தட்டியது) அந்த ஜம்பம் என்னிடம் சாயாது தெரிந்ததா? இருவரும் சிரமப்பட்டால்தான் பசியாற வழியுண்டு. ஆகை யால் நான் உள்ளே போய் அடுப்பு மூட்ட வசதி உண்டா என்று பார்க்கிறேன். அதற்குள் நீ போய் ஒரு பாத்திரத்தை யெடுத்துக் கொண்டு வந்து இந்த மாட்டைக் கறக்க வேண்டும்...' “அது உதைக்குமே!...” “பட்டுக் கொள். முன்னால் ஒரு தோண்டி ஜலம் மொண்டு கொள்கிறேன். அப்புறம் நீ தாம்புக் கயிற்றை அணை கயிறாய் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்...” பசுவின் முகம் சரியாயில்லை. ஒரக் கண்ணால் ஆளை தோட்டம் பார்ப்பது போலிருந்தது. கன்றை ஊட்ட விடும் போழுதெல்லாம் பசு சும்மா இருக்கும்; கன்றை விரட்டி விட்டு, பின்னங்காலைச் சேர்த்துக் கட்டி, பயந்து பயந்து நெருங்கி. மடியைத் தொட்டவுடனே உதைக்கும் பின்புறம் கன்றுக்குட்டி ஓடி வந்து முட்டும்! இதற்கிடையில் காலைக் கட்டி எஞ்சிய தாம்புக்கயிறு இவனைத் தடுக்கிவிட்டது. இந்த நர்த்தனாவஸ்தையில் கவிஞன் உழன்று கொண்டிருக்கையில், கதாசிரியன் உள்ளேயிருந்து வந்தான். - 'அரிசி அகப்பட்டது...பானையில்...புழுங்கலரிசி' ‘ஐயோ! எனக்குப் பச்சரிசி தானே பழக்கம்!...” என்று ஓலமிட்டான் கவிஞன். 'தவிர, ஏதோ மிளகாய், உப்பெல்லாம் இருக்கிறது. ஆனால் எனக்குச் சாதம் ஒன்றுதான் வடிக்கத் தெரியும். நீ கறக்கும் பாலைக் காய்ச்சிச் சோற்றில் விட்டுக் கொண்டு சாப்பிட வேண்டியது தான்...” 'தொட்டுக் கொள்ள?...வெறும் பாலுஞ்சோறு வயிற்றை குமட்டுமே!’ “ஒரு மண்ணும் தெரியவில்லை..முக்கியமான விஷயம் மீ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/58&oldid=870416" இலிருந்து மீள்விக்கப்பட்டது