பக்கம்:மீனோட்டம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மீனோட்டம் தீப்பெட்டி, அதைக் காணோம்...நீ என்ன சிகரெட் பிடிப்ப துண்டா? கோபித்துக் கொள்ளாதே...கவிகள் அந்தப் புகை யில்தான் தங்கள் கற்பனைகளை மிதக்க விட்டு, கவிதையைப் பொங்க வைத்துச் கொள்வது வழக்கம் என்பார்களே என்று கேட்டேன். அப்பொழுது நெருப்புப் பெட்டி உன்னிடத்தில் நிச்சயமாயிருக்குமல்லவா?... அதென்னவோ அவர்களுடைய நல்ல காலம் இந்தக் கவிக்கும் சிகரெட் குடிக்கும் வழக்கமிருந்தது. சிகரெட் தீர்ந்து விட்டது. நெருப்புப் பெட்டி மாத்திரம் மிஞ்சி இருந்தது. உள்ளே கதாசிரியன் அடுப்புப் பற்ற வைத்துக் கொண் டிருக்கையில், தடதடவென்று உளறியடித்துக் கொண்டு கவிஞன் வந்து, கதாசிரியனின் காலடியில் விழுந்து, கால் களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான். "அப்பா, நீ எனக்கு வெறுஞ்சாதத்தையே போடு. நான் அதை வில்லுண்டையாய் விழுங்கி வைக்கிறேன். அந்த மாட்டை மாத்திரம் கறக்க வைக்காதே-இதோ பார், அரிசி களைகிறேன்; அடுப்பு விசிறுகிறேன்; இலை போடு கிறேன், ஜலம் எடுத்து வைக்கிறேன்; எச்சில் திரட்டுகிறேன். அந்த மாட்டை மாத்திரம்...” கதாசிரியன் ஆரம்பித்தான் ! நீ எடுத்த காரியம் எதுவும் விடியாது-நீ பட்டினத்துக் கவியல்லவா?- நான் இப்பொழுது பட்டினத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் பிறந்து வளர்ந் தேன். என் தயார் எருமை மாடு கறப்பாள்; என் தகப்பன்...' "ஐயோ-உன் கோனார் வம்சாவளியெல்லாம் வேண் டாமே! இது பசுமாடப்பா, பசுமாடு!-வசனம் கேட்ட தில்லையா- பசுவையும் பார்ப்பானையும்...” கதாசிரியன் பல்லைக் கடித்துக் கொண்டு : "ஆம், நான் பார்ப்பான் தான்-உன் குறும்பு நாசமாய்ப் போக-கோனா ரில்லை. ஆனால், பட்டிக்காட்டில் பார்ப்பானுக்கும் பால் கறக்கத் தெரியும், எனக்குப் பால் கறக்கத் தெரியும்-இதோ பார். பத்து நிமிஷத்தில் திரும்பி வருகிறேன். ஹே மஹா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/59&oldid=870418" இலிருந்து மீள்விக்கப்பட்டது