பக்கம்:மீனோட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலி வீடு 59 கவியே?...” என்று கொல்லைப்புறம் சென்றான். கவிக்குக் காரியம் எதுவுமில்லை. சுவரில் அங்குமிங்கும் சிதறிய இருண்ட மாடங்களிலும், புதைந்த சட்டிகளிலும் கையை விட்டுத் தோண்டிய வண்ணம், தான் இவ்வேளையில் தன் வீட்டிலிருந்தால், தனக்கு ஏற்பட்டிருக்கும் செளகரியங் களை எண்ணி எண்ணி நைந்துருகினான். காலை ஏழு மணிக்கு கண் விழித்தவுடன் பல் விளக்கு முன் படுக்கையை விட்டு எழுந்திருக்கு முன்னே, ஏதோ சொல்பமாய் ஒரு கப் டீ. பிறகு பல் விளக்கிக் கொண்டு சுடச்சுட இட்டலி, காப்பி. (ஒர் இட்டலிக்குச் சட்னி, ஒர் இட்டலிக்குக் கத்திரிக்காய் கொஸ்து)-அப்புறம் 8, - 8.30 மணிக்கு உடம்பு தேறுவதற்காக ஒரு கப் ஒவல்டின் இச்சமயம் திடீரென்று கவியின் சிந்தனைகள் சிதறின. தலைமட்டத்துக்குச் சற்று உயரமாய் இருந்த ஒரு மாடத்தில் நுழைந்திருந்த அவன் கையில் ஏதோ மிருதுவாய் சிக்குண்டது. சற்று சிரமப்பட்டுக் காலை எழுப்பி அதை முன்னுக்கு இழுத் தான். அவ்வளவுதான்... - கவி போட்ட வீறிடலில், கதாசிரியன் அலறிப்புடைத்துக் கொண்டு, கொல்லைப் புறத்திலிருந்து ஓடி வந்தான். கவியின் முகம் சுண்ணாம்பாய் வெளுத்துக் கிடந்தது. வாயடைத்து விட்டது. சுவரைச் சுட்டிச் சுட்டிக் காண்பித் தான் கவி. மாடத்திலிருந்து ஒரு புலித்தலை எட்டிப்பார்த்தது. கதா சிரியனே திக்பிரமை பிடித்துச் சற்று அயர்ந்து விட்டான். அவ்வளவு தத்ரூபம்! "கீச் கீச்" என்று கத்திக் கொண்டு ஓர் எலி பின்னாலிருந்து அதை உருட்டி விட்டபின்தான், அது பஞ்சும் கதம்பை நாரும் அடைத்த உயிரற்ற தலை என்று அவர்களின் உணர்வில் பதிந்தது. அதன் நெற்றியில் கண்களின் நடுமையத்தில் ஓர் அம்பு ஊடுருவிப் பாய்ந்து நெட்டுக்குத்தாய் நின்றது. கவி நாம்-ஷாப்பிட்ட பிழகு-இழைப்பட்றி-அப்புழம். பேஷி-கொழ்ழலாம்’ என்று தைரியமாய்க் குழறினான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/60&oldid=870422" இலிருந்து மீள்விக்கப்பட்டது