பக்கம்:மீனோட்டம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மீனோட்டம் யினின்று ஆதித்தன் புறப்படும் அழகையும். நடுப்பகவில் ஆகாய வீதியில் அவன் செல்லும் வேகத்தையும் மாலையில் அருவியின் கரையில் மனையாளுடனும் மகவுடனும் நின்று கொண்டு மேல் திசையில் அவன் மறையும் அழகையும் பார்த்துக் கொண்டே, நாள் முழுவதும் கழிக்கலாமே! இடை யில் போகாத பொழுதுக்கு வயலில் பயிர் வேலை இருக்கிறது. புழக்கடையில் காய்கறி போடலாம்-எப்படிப் பொழுது போக்குவது என்னும் கஷ்டத்தை இம்மூவரும் அனுபவித்த தாய்த் தெரியவில்லை. நாள்கள், வருஷங்கள் கழிந்தன. 'பிறகு ஒரு நாள் அந்தப் புருஷன், கையில் வில்லும் அம்பும் ஏந்திக் கொண்டே (இவ்விடத்தில் துப்பாக்கியும் தோட்டாவும் ஏது) வெளியே புறப்பட்டான். எங்கே? எதற் தாக?' என்னைக் கேட்காதே. பல காரணங்கள் இருக்கலாம்: இந்த குன்றின் சாரலுக்கப்புறம் என்ன பிரதேசம் என்று காண இருக்கலாம்; அல்லது, வானம் பூமியைத் தொடும் எல்லையை எட்ட இருக்கலாம். எப்படியும் புறப்பட்டாகி விட்டது. ஆனால் புறப்பட்டவன் அத்துடன், அவ்வளவு தான். நடுப்பகலாயிற்று; மாலையாயிற்று; இரவாயிற்று; நடுநிசியுமாயிற்று; போன ஆள் திரும்பவேயில்லை. 'மறுநாள் வெள்ளி வேளையில் தாயும் மகனும் தேடப் புறப்பட்டார்கள். பார்வைக்குக் கிட்ட இருக்கும் மலைத் தொடர், நெருங்க நெருங்க எட்டிக்கொண்டே போயிற்று. உச்சி வேளையில், முள்ளும் கல்லும் பட்டு இரத்தம் வழியும் கால்களுடன், மலைத்தொடரைக் கடந்தார்கள். கடந்ததும், அவனைக கனடrர்கள், ! "ஆனால், இனி அவனேது? அதுதானே! கூடு விட்டு ஆவி போனபின் மனிதன் ஜடவஸ்துதானே. உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வர்ை அவர் என்கிறார்கள்; பேரைச் சொல்லுகிறார்கள்; பெரியவர் என்கிறார்கள். உயிர் நீங்கியதுதான் தாமதம் பிணத்தைத் துரக்கு என்கிறார்கள். பெரியவரைத் துரக்கு...' என்றா சொல்கிறார்கள். "ஆகையால், அது விரிந்த கைகளுடன் குப்புற விழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/63&oldid=870428" இலிருந்து மீள்விக்கப்பட்டது