பக்கம்:மீனோட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 64 வேண்டிய அத்தாட்சிகள், நம்முடைய இதிகாச புராணங் களில் முதற் கொண்டு இருக்கின்றன. பரசுராமன் என்ன, கார்த்த வீரியார்ச்சுனன் என்ன, ராமராவன யுத்தம் என்ன, கம்ஸன் வாசுதேவ பரம்பரையை அறவே அழிக்க முயன்றது என்ன, அதே கிருஷ்ணபரம்பரையின் யாதவகுல நாசம் என்ன. பாரத யுத்தம் என்ன, நம் தேச சரித்திரத்திலேயே சாணக்கிய சாஹசம் என்ன, அலாவுதீன் கில்ஜி சரிதம் என்ன-இப்படியாகப் பல உதாரணங்கள் உண்டு. நம் வாழ்க்கையையே பார்க்கப் போனாலும், ஒன்றுக்கு ஒன்று பழிக்குப் பழியாய்த்தான் இருக்கிறது...பார், இந்தப் பாம்பு என்று தான் இருக்க வேண்டியதில்லை. எந்தப் பாம்பைக் கண்டாலும் கீரி துரத்துகிறது. எலியைக் கண்டால் பூ...” சரி தானப்பா... உன் கதையைச் சொல்லு. உலகத்தின் கதையைச் சொல்லிவிட்டு, உன் கதையென்று ஏமாற்றி விடாதே...” என்று கவி இடை மறித்தான். “என் கதை இனி அதிகமில்லை. ஒருநாள். நேற்றுகாலை பையன், கையில் வில்லும் அம்பும் ஏந்தி இதுவரை விட்டில் பயின்ற பயிற்சியை, அம்பலத்தில் ஆடச் சென்றான். காலை ஆயிற்று, பகலாயிற்று, மாலையாயிற்று: புலிவம்சத்தைத் தேடச் சென்ற பையன் இன்னும் மீளவில்லை. தாயின் உள்ளத் துடிப்பை சகிக்க முடியவில்லை. அடுப்பில் சொருகிய கொள்ளிக் கட்டையை அவிக்கவும் மறந்து தனயனைத் தேடிச் சென்றிருக்கிறாள்-இன்னமும் வந்து கொண்டிருக் கிறாள். ஆம், இப்பொழுது நல்ல இருட்டுத்தான். மாலை வேளையில், மரங்களும் செடிகளும், திடீரென்று அரும்பிய அழகு போய், இப்பொழுது இருவிருளில், உருவற்ற மொந்தா காரமாய், அங்கங்கே ஒரு விதமான பயங்கரத்துடன் திமிறி நின்றன. புட்களின் அரவம் அடங்கியது. அப்பொழுது சங்கீதமாய் ஒலித்த செடி கொடிகளின் உராய்வுகள், பாம்பு, - பூச்சிகளின் அர்த்தமுள்ள சலசலப்பாய் மாறியது...... இவ்வித்திர ஜாலத்தின் திகைப்பில், இருவரும் கற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/65&oldid=870434" இலிருந்து மீள்விக்கப்பட்டது