பக்கம்:மீனோட்டம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மீனோட்டம் பன்னிரண்டு வயசிலே ஒரு மவன் இருக்காங்க-அவளையும் மகனையும் கொண்டு போய் விட்டுட்டு, இப்பத்தான் வாரே னுங்க.” சரிதான். சரியான ஒட்டை வாய்தான்!” "நீங்க எங்கே போவனுங்க?" வெட்டி வாக்கம்- என்று இருவரும் ஒரே மூச்சில் சொல்லிவிட்டு, ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். 'அட ராமா! வெட்டிவாக்கம் இதோ இருக்குதுங்களேமலையைத் தாண்டினா வெட்டிவாக்கம்-காலையிலே காமிக் கிறேனுங்க-அங்கேதான் நம்ப எசமான் இருக்காரு-நீங்க இந்தப் போட்டோவைப் பார்க்கல்லே, அது அவர் தானுங்க.” ஆமாம், யார் அவர்?-’ 'அவர் தான் என் எசமானுங்க-பெரிய வைத்தியருங்கஐயாக் கண்ணு பண்டிதரு என்னு பேருங்க-’ 'யார் ஐயாக் கண்ணுப் பண்டிதரா! அவரைத் தான் நான் பார்க்க வேண்டும்.’’ என்றான் கதாசிரியன். 'இதென்ன! நானும் அவரைத்தான் பார்க்க வந்தேன்-” என்றான் கவி. 'சரி தானுங்க, நாளை காலைலே நானே கொண்டுபோய் விடுறேன்-இந்தப் பக்கத்திலே - அவருக்கு நல்ல பேருங்கஇப்போ புதிசா ஒரு மூலிகை ஒண்னு அகப்பட்டிருக்குது அவருக்கு-ரொம்ட ரகசியமா அதை ஏதோ புடம்வெச்சிருக் காருங்க-இங்கே தான், இந்த வீட்டுப் புளக்கடையிலேஅதுக்குக் காவலுங்க நானு-புளக்கடைக்குப் பின்னாலேஅது பயிராவுதுங்க - அவரு ஒரு மாதிரி மனுசன்-அவுரு புதுசாக் கண்டுபிடிச்சதாலே, மற்றவங்க கண்ணுக்கு படக் கூடாதாம்-பட்டா அவுங்க அந்தப் பதங் கண்டு மருந்து செய்திட்டால், அவுரு மகிமை போயிடுதல்ல? என்ன யோசனை பண்ணுறிங்க-புரியுதில்லே-?” 'நன்றாய்ப் புரிகிறது.நீ போய்ச் சாமானை இறக்கு தோளிலேயே வைத்துக் கொண்டிருக்கிறாயே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/67&oldid=870438" இலிருந்து மீள்விக்கப்பட்டது