பக்கம்:மீனோட்டம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மீனோட்டம் 'ஏனப்பா, இந்தப் புலித்தலையில், அம்பு சொருகி நிற்பதேன்?" அவன் கொஞ்ச நாழி மிரள மிரள விழித்துவிட்டு 'ஓ! அதுவா? அது நம்ப பையன் வேலைங்க-(சலுகைக்குரலில்) --சுத்தக் கேப்பு மாரிங்க, இந்தப் பக்கம், காடை, கவுதாரி பறவைகளெல்லாம் லாஸ்தி. அதுகளை அடிச்சுச் சந்தைக்குக் கொண்டு போனா, நல்ல துட்டு-அதுவும் கொஞ்ச தூரம் தாண்டி ரயிலேறிப்போனா துரைமாருங்க வாங்கினா, ஒரு காடைக்கு, ரூபா ரெண்டு, மூனுகூட அகப்படுங்க. அது சுட்றதுக்கு, இங்கே, இவன் குறி பழகறானாம். அந்தப் புலித்தலை, சுவரிலே, அழகா மாட்டறதுக்கு வைத்தியர் வாங்கினாரு; அதை, அவர் இல்லாத சமயத்திலே, பையன், இந்தக் கோலம் பண்றானுங்க சாப்பிட உட்காரச் சற்று நேரத்துக்கு முன்னால், கவி ஒரு கேள்வி கேட்டான், கதாசிரியனை கோழி முட்டை பார்த்திருக்கிறாயா?-’ 'இதென்ன கேள்வி, சாப்பிடும் வேளையில்?“எவ்வளவு அழகாயிருக்கிறது! வழ வழ வென்றிருக்கிறது! வட்டமாயிருக்கிறது! வடிவாய் இருக்கிறது - ஆனால் அதையெடுத்துத் தூணிலோ, சுவரிலோ அறைந்தால்...” "ஐயோ ஆபாசமேl-' என்று அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டான் கதாசிரியன். "அதே லட்சணம் தான், புலித் தலையை வைத்து நீ கட்டிய கதையும், அதற்கு இந்த ஆள் கொடுத்த வியாக்கி யானத்துக்கும் நீ கட்டிய கற்பனைக்கும்-’ மெளனம் குடி புகுந்தது அவ்விடத்தில். திடீரென்று வான் தகட்டில் துளை விழுந்தது போல். நட்சத்திரங்கள் பிரகாசித்தன. அருவியில், சிற்றலைகள் மெள்ளக் கரையில் துவளும் சலசலப்பு, காதில் வந்து மோதியது. அத்துடன், அடிவயிற்றில் பசியைக் கிளப்பும் வேகத் துடன், உள்ளிருந்து, முள்ளங்கிக் குழம்பின் வாசனை கம்’ மென்று காற்றில் மிதந்து வந்து கலந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/69&oldid=870441" இலிருந்து மீள்விக்கப்பட்டது