பக்கம்:மீனோட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மீனோட்டம் நின்றேன். என் மனதில் எண்ணாத எண்ணங்களெல்லாம் ஒடத் தலைப்பட்டு விட்டன.

சி, என்ன காரியம் செய்தோம்! கேவலம், இந்த மீனை அவளைப் போல் பிடிக்க நமக்குத் தெரியவில்லை என்கிற ஆங்காரத்தில் அவளைத் தொட்டு அடித்தோமே!--இந்த மீனை நாம் என்ன சாப்பிடப் போறோமா, வீட்டுக்கு இதாண்டு போய்-இதைப் பிடிச்சால் என்ன, பிடிக்காவிட்டால் என்ன? விளையாட்டாய் வந்து வினையா முடிஞ்சுதே!-- அதுவும் நாளைக்கு ஊருக்குப் போகப் போகிறோம், போகிற போக்கில் கங்காவோடு சண்டை போட்டுண்டா போகணும்! அப்போ, நான் ஊரிலே இருந்தா, இந்தச் சண்டை நினைப்பு வந்தால், எவ்வளவு சங்கடமாயிருக்கும் இப்படிப் பிழிய பிழிய அழறாளே, இந்தக் குரல் தானே, ராத்ரி நான் துரங்கறப்போ என் கனாவிலே கேட்கும் அப்போ, ரொம்பக் கஷ்டமாயிருக் குமே, நான் என்ன செய்வேன்!”

துக்ககரமான யோசனையின் பரவசானந்தம் எனக்கு அப் பொழுது புதிது. அந்த சுகத்தில், நான் என்னை மறந்தேன் கங்காவை மறந்தேன். எல்லாம் மறந்து, என்னில் லயித்து விட்டேன். அதனால், கங்கா என்னைத் திடீரென்று கட்டி யணைத்ததும், எனக்குத் திக் கென்றது. "ஏன் என்னிடம் வராய், மறுபடியும்?' என்றேன். பின்னே நீ-இ-இ-யும் அழறையே-எ-எ-நான் தான் அழுதா-அ-அ-ல்-' என்று விக்கினாள் துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டு. அப்பொழுதுதான் எனக்கே தெரிந்தது என் கன்னம் நனைந்திருப்பது-எனக்கே வெட்கமாய்ப் போய்விட்டது. 'சரி வா, ஆத்துக்குப் போகலாம்-” என்றேன் பேச்சை மாற்ற. அதெல்லாம் முடியாது-உனக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துட்டுத்தான்-பார், உன் கை என் கையை விட நன்னாயிருக்கு-நீ என்னை விட நன்னாப் பிடிப்பாய் -’’ சரிதான் வாயேன்.-” “ஊ-ஹசம்-இடுப்பு வேஷ்டியை அவிழ்த்துப் போடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/71&oldid=870447" இலிருந்து மீள்விக்கப்பட்டது