பக்கம்:மீனோட்டம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 71 தண்ணு மேலே-பார், துணி மேலே எவ்வளவு மீன் குஞ்சு வரது-நாலு முனையும் ஒண்ணாச்சேர்-அப்படித்தான்-அகப் பட்டுக் கொண்டதையா நாலு-தொட்டுப்பார்-இந்தத் துணிக் குள்ளே இருக்கறதை விட்டுப்பிடி-அது பழகினதும் ஒடற தண்ணுலேயே பிடிக்கலாம்.இது மாதிரி. தண்ணீரில் வாய் போல் விரிந்து வேகமாய்ச் சென்ற அவள் விரல்கள் 'சடக்” கென மூடின. கட்டை விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையில் தண்ணிரில் ஒரு சிறு கலவரம் உண்டாயிற்று. டேய்-டேய் தொட்டுப்பாரேன்.” என்று கங்கா கத்தி னாள் சிரித்துக் கொண்டே, மீன் செதிள் குறுகுறுவென்றது. அடுத்தடுத்து வரும் எங்கள் சிரிப்பு மணற் குன்றுகள் வரை உயர்ந்து அவைகளில் ஒளிந்தன. - 翼 篱 屬 மறுபடியும் அவ்வூற்று நீர்க்கரையோரந்தான்; அதே மணற்குன்றுகள் தான். எத்தனையோ காலடிகள் அமிழ்ந்து கலைந்தும், சற்றும் மாறாத அதே மணல் தான். அதோ துரத் தில் காணும் ஊரைச் சுற்றிய தோப்பில், சில புது மரங்கள் வளர்ந்திருந்தன-பழைய மரங்கள் பட்டிருந்தன.அவ்வளவு தான்.வேறொரு வித்யாசமுமில்லை. கிராமாந்திரங்களில் கால வித்யாசம் அதிகம் தெரிவதில்லை. பட்டணத்தில் நேற்று போய் இன்று வருவதற்குள் ஒரே புரட்டல். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஊருக்கு வருகிறேன். ஆனி மாதம் வெயில் பட்டை வாங்குகிறது. செருப்புப் போட வில்லை. உள்ளங் கால்களிரண்டும் கீழே பதியாமல் தவிக்க ஆரம்பித்து விட்டன. காலை அலம்பிக் கொள்ளலாம் என்று கால்வாயில் இறங்கினேன். - எதிர்க்கரையில் ஒரு சிறு கூட்டம். கலியாணக்கோலம். மஞ்சள் தெறித்த துணிகள் வெயிலில் பளீர் பளிர் என்றன. பாலிகை கொட்ட வந்தவர்கள் போலும், டே, டேய்-உன்னைத் தானே, உன் பேர்-சுருக்க வாயில் வரவில்லையே!-” கங்காவின் தகப்பனார் தான், சந்தேகமில்லை. உடம்பு முன்னைவிடச் சற்று ஒடுக்கம். ஆனால் அவர்தான். அப்படியே கடந்து அக்கரையடைந்தேன். எல்லோரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/72&oldid=870448" இலிருந்து மீள்விக்கப்பட்டது