பக்கம்:மீனோட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மீனோட்டம் அன்புடன் வரவேற்றார்கள். “ஏண்டா, இன்னம் இரண்டு நாள் முன்னமே வரப் படாதோ’ பத்திரிகை கூட அனுப்பிச்சோமே, தவறாமல். தவிர, தபால் கூடத் தனியா எழுதினோமே!-’ 'இல்லை மாமா, எனக்கு வந்து சேர்ந்திருக்காது-அந்த விலாசத்தில் நான் இல்லை-அந்த ஊரிலேயே இல்லை. இப் போது-இது யார் கங்காவா? ஏது அடையாளமே தெரியலையே!-” 'ஏன் தெரியும்.இன்னும் நாலு வருஷம் பொறுத்து * "سس إrrره கங்கா, கால் கட்டை விரலால், மணலைக் கிளறிக் கொண்டே கீழ்நோக்கிய பார்வையுடனே சுறுக்கென ஒரு கண்கனை தொடுத்து வெற்றிப் புன்னகை புரிந்தாள். என் மனத்தில் ஏன் முள் தைக்கிறது? ஏன் அவளைக் காணக் காண, மனதில் ஒரு வேகமும் ஆங்காரமும் உண்டாகின்றன? அவளைக் காணச் சகியாமல், கலியானப் பிள்ளையின் பக்கம் திரும்பினேன். ஆனாலும் இந்தக் கரிக்கட்டையை கட்டிக் கொண்ட தற்கு இவளுக்கு இவ்வளவு ஆணவம் வேண்டியதில்லை. வாய்க் காவியைப் பார்த்தால், சக்கையாய்ப் புகையிலை தீட்டு வான் போலிருக்கிறது. 'என் மருமான்’-கடலூரிலே தனியாக் கோவிலில் பூஜை பண்ணிக் கொண்டிருந்தான்-பெண்ணைக் கொடுத்து வீட்டோடே வெச்சுக்கலாம்னு தீர்மானிச்சுப்பிட்டேன். அவ னுக்கும் பெற்றவாளில்லை-நமக்கும் புத்திர பாக்கியமில்லை என்று பகவான் வெச்சுப்பிட்டான்-எனக்கும் வயசாயிடுத்து. இங்கே கோவில் பூஜைக்கும் எனக்குக் கொள்ளி போடறத் துக்கும் ஒருத்தன் வேணுமில்லையா?- என்றார் கங்காவின் தகப்பனார். என்ன மாமா, கலியாண சமயத்திலே இப்படியெல்லாம் பேசலாமா?-’’ - “அதுவும் ஒரு கலியானந்தாண்டா-சரி வாங்கோ போகலாம்-'மத்தியான மெல்லாம் நான் ஜோலியாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/73&oldid=870449" இலிருந்து மீள்விக்கப்பட்டது