பக்கம்:மீனோட்டம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனோட்டம் 75 சொத்து. . எதிர்க்கரையில் ஒரு ஸ்திரீ ஸ்நானம் செய்து கொண்டி ருந்தாள். அவள் முகம் பழகிய முகமாயிருந்தது. என் கையிலெடுத்த தண்ணீர் என்னையறியாமல் விரல் களின் வழியே வழிந்தது. ஆம் அவளேதான். ஆனால், அவள் இவள்? - பச்சையிலேயே பட்டுப்போனாற் போன்ற வற்றி இளைத்த உடல், தோற்றத்திலேயே ஒரு தனி அசதி. சோகம் தேங்கிய முகம். இவ்விடத்து நினைவு அற்று இருந்தன அவள் கண்கள். அந்தப் பழைய துறுதுறுப்பு எங்கே ஒடியது? இவளுக்கு இத்தனை கிழத்தனம் எங்கிருந்து வந்தது? திகைப்புடன் அவனையே நோக்கி நின்றேன், என்னை மறந்து அவள் இன்னும் என்னைப் பார்க்கவில்லை, அவள் புடவை முன்றானை, தண்ணீரில் விழுந்து காற்று உள்புகுந்து பட்ர்ந்து பொங்கியது. அதைக் கண்டதும் சடக்கென்று அவளது முகத்தில் ஒரு புன்னகை பாய்ந்தோடியது. அவள் முகத்தில் பழைய இளமையின் கனவைக் கண்டேன். வாய் போல் அவள் விரல்கள் விரிந்து தண்ணீரைக் கிழித்து நீந்தின, - 'ஏ பிணமே நீ என்ன பார்ப்பாரப் பெண்ணா யிருக்கையா நீ அதுவும் கோவில் பூஜை செய்யற குடும்பமாவா இருக்கே? மீன் பிடிக்கிறையே, மீன்-?” கர்ண கடுரமான அந்தத் தொனி, என் பக்கத்திவிருந்து திடீரென்று கிளம்பியதும், எனக்கே துக்கிவாரிப் போட்டது. அந்தக் கறுப்புப் பிராம்மணன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பற்களை நெறநெற வெனக் கடித்து, இன்னும் என்னென்னவோ உளறினான். ஆனால், அவளைத் தான் பார்க்க சஹறிக்கவில்லை. அவள் உடல், கைகள் எல்லாம் வெல வெலத்து விட்டன. ஏதோ பழகிய சப்தத்தைக்கேட்டு விட்டு அதைத் தேடுவது போல் சுற்று முற்றும் அவள் கண்கள் பதறித் தேடின. ஆனால் ஒருவருமில்லை. எதிரில் அவள் புருஷனும் நாடோடிப் பயலும்தான், இதற்குள் அவள் முகம் வெளுத்து நீலம் பூரித்து விட்டது. அவசரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/76&oldid=870452" இலிருந்து மீள்விக்கப்பட்டது