பக்கம்:மீனோட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மீனோட்டம் அவசரமாய் எதையோ கண்டு தப்பி ஓடுவது போல், புடவையைச் சுற்றிக் கொண்டு, சொட்டச் சொட்ட கரை ஏறி, மணல் மேட்டின் பின்புறம் மறைந்தாள். இரண்டு நிமிஷங்களுக்கெல்லாம், அவள் கணவன் அவளைத் திட்டிக்கொண்டே அவ்விடம் விட்டகன்றான். நான் திக்ப்ரமை பிடித்து அங்கேயே சற்று நேரம் உட் கார்ந்திருந்தேன், வேகும் வெயிலில் கால்வாய்த் தண்ணிரை விரைத்துப் பார்த்துக் கொண்டு, அந்த மீன்கள்-மனித வர்க்கம் வாழ்ந்தால் என்ன, வீழ்ந்தால் என்ன? அவைகளுக்கு கவலை? இரக்க மற்ற ஆனந்தத்துடன் மின் துண்டுகள் போல், வெள்ளி வயிற்றைப் புரட்டிப் புரட்டித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. நான் அக்ரஹாரத்துள் புகவில்லை. வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு, ரயிலடிக்கு விரைந்தோடி னேன்; ஏதோ ஒரு குற்றவாளியைப் போல, அவசர அவசர மாய் ஓடினேன். காரணம் எனக்கே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/77&oldid=870453" இலிருந்து மீள்விக்கப்பட்டது