பக்கம்:மீனோட்டம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மீனோட்டம் ரூம் சாவியை இத்துடன் அனுப்பியுள்ளேன். நமஸ்காரம். பி.கு :-அம்மா, எனக்காக சுடச்சுட ஆவி பறக்க நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கலை ஒரு தடவை வழிச்சு அடித்தொண்டையில் விட்டுக்கோ. சூடு உள் இறங்கும்போது என்னை நினைச்சுக்கோ. எனக்குத்தான் கொடுப்பனை இல்லை. பி.பி.கு:-திரும்பி வர்றப்போ நேரில் சாவியை வாங்கிக்க றேன்.' அவள் விழியோரங்கள் லேசாய்ப்பணித்தன. அவன் ஆசையாத்தான் எழுதியிருக்கான். ஆனால் பொங்கல் தொண்டையிலே விக்கிக்கத்தான் போறது. சேந் தாப் போல பத்து நாள் பையன் வந்து இருந்தான்னர் அவன் வாய்க்கு உணக்கையா மோர்க்குழம்பில் பருப்புருண்டை, அடிநாக்கில் தொட்டு இழுக்கிற மாதிரி வெத்தக் குழம்பும் தேனாப் பண்ணிப் போடலாம். ஆனா அவருக்குக் கர்ரம் ஆகாது. அம்பி வந்தால் வீட்டுக்கு வெளிச்சம் போட்டாப் போல இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துக் கறதுல மன்னன். அவருக்கேற்ப பூஜைக்குக் குடலை வழிய மலர் பறிப்பதும், மூணு வேளை மூக்கைப் பிடிப்பதும், எனக்கு அம்மியிலே அரைச்சுக் கொடுப்பதும், தேங்காயை மட்டை உரிப்பதும் ஏண்டா உனக்கு தலையெழுத்து என்னால் முடியாதா? அப்பிடியே முடியாட்டாலும் சிவாமி யும்:காத்தானும் இருக்காளே என்னாலும் கேக்க மாட்டான். 'தில்லிக்குப்பாச்சா, தல்விக்குப் பிட்டா. நான் இதெல்லாம் பண்ணாட்டா, இதெல்லாம் எனக்குத் தெரியும்னு உனக்கு எப்பம்மா தெரியறது? அப்பிடிம்பான். பிரிவுங்கறது கஷ்டமாத்தான் இருக்கு. அதுவும் ஒரே பிள்ளை. முன்னாலே யும் பின்னாலேயும் போயாச்சு. இந்தக் குடும்பத்துலே மட்டும் ஏன் தான்.இப்படி ஒரு மரத்துக்கு ஒர் இலையாப் போச்சோ? இத்தனைக்கும் இவருக்குக் கூடப் பிறந்தவா இரഒു. முணுமா, அஞ்சு பேர் இருக்கா. மச்சினமார்களுக் கும், நாத்தனார்களுக்கும் புத்ர சம்பத்துக்குக்குறைவில்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/79&oldid=870455" இலிருந்து மீள்விக்கப்பட்டது