பக்கம்:மீனோட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 79 எல்லாரும் செளகரியமாத்தான் இருக்கா. அண்ணாவுக்கு தீங்கள் பங்கை எழுதி வெச்சுட்டா, நமக்கு வயல்லேந்து வ்ர்றது வ்யத்துக்கு போறும்னு புள்ளையை ஆத்தோடு நிறுத்தி வெச்சுக்க முடியல்லியே படிப்பு, உத்ய்ோகம்எல்லாத்தையும்விட அவளோட போட்டி அதுலல்லாம் ஆசை விட வில்லையே! மிச்சினன்மார் கெட்டிக்காராள், ஆன்ாலும் அவர் பேரை விள்ங்க வெக்கற மாதிரி அவா குழந்தைகள் சுவாரஸ்யமா இல்லை. சரி, புத்தி எங்கேயோ குப்பை மேட்டைச் சுத்தறது, நம்ம விதி நம்மதுன்னு இல்லாமே. டோவோமா?" அவள் கேள்விக்கு அவர் தலையசைக்கா விட்டாலும்பேசாமலிருந்தாலே அவள் அனுபவத்தில் அப்பிடித்தானே அர்த்தம். ஆனால் வீட்டை விட்டு வெளியூருக்குக் கிளம்பற்துங் கறது லேசா இருக்கா? வீட்டுக்குக் காவலாப் படுக்க, பக்கத் தாத்து தயவை நாடணும். அந்தப் புது ஜோடிக்கு கொண் டர்ட்டந்தான், மாமியார் காவலிலிருந்து இரண்டு மூணு ராவேனும் விடுபடலாமே கொட்டிலில் மாட்டைப் பராமரிக்க னும்; புது மாடு புதுக் கன்னு. ஆனால் நல்ல பால். கள்ளிச் சொட்டாட்டம் கறந்து காய்ச்சி வீட்டுக்குக் காவல்காரா குடிக்கத்தான் போறா. குடிச்சுட்டுப் போறா. நெல்லு முட்டையை எலி கடிக்காமல், மல்லிச் செடி வாடாமல், தண்ணி ஊத்திப்பாத்துண்டா சரி. இன்னும் ஏதோதோ இருக்கு சொல்றதும், சமயத்துல சொல்ல மறந்து போறதும். எல்லாத்துக்கும் மேலே அவரோட உடம்புவாகு இருக்கு. மூல உபத்திரவம். மாடி ஏறினால் மேல்மூச்சு வாங்கறது. இப்போது சமீப காலமா ரத்தத்துல ஏதோ சக்கரையாம், உட்காந்தா குத்தம். நின்னா அபராதம்னு இருக்கு. இப்ப டியே இருந்தா விடே ஜெயில், உடம்பே சிறைன்னு இன்னும் எத்தனை நாள் ஒட்ட இருக்கோ? போனாலும் போறதுன்னு துணிஞ்சவாளுக்குத் தான் சாமியும் பின்வாங்கறார். ... - போவோமா? என்றாள். பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்குள் நுழைகையிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/80&oldid=870457" இலிருந்து மீள்விக்கப்பட்டது