பக்கம்:மீனோட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மீனோட்டம் கூட்டம் நெரிந்தது. பிளாட்டாரங்களில் வளையல், துணி, மிட்டாய், பட்டாணிக் கடைகள் போட்டு வியாபாரம் மும் முரமாய் நடக்கிறது. ஊரே ஜே ஜே கலகல ன்னு எவ்வளவு நன்னாயிருக்கு ஏற்கெனவே இங்கே வருடம் முந்நூத்தி அறுவத்தி அஞ்சு நாளும் உற்சவம். உற்சவருக்குத் தன் கிரகமே மறந்திருக்கும், எப்பவும் தெருவில்தானே வாசம். கூட கோடி நாமம் சேந்துண்டா கேக்கவும் வேணுமா? கிரா மத்துலேயே உட்காந்துண்டிருந்தா இதெல்லாம் கிடைக்குமா? நூறு ஆயுசு. சாமியே தோ வந்துட்டாரே! என் கையைப் புடிச்சுக்கோங்கோ. பரவாயில்லே. கூட்டத்தில நம்ப நாட்டுப்புறம். இன்னிக்கு என்ன நந்தி வாகனமா? வெள்ளிக் கவசமா? சாமிக்கு ஏன் இந்த அவசரம், திருவாசிசுட இல்லாமல்? சாமியா? அம்மனா? தாரை, தப்பட்டை, கொட்டு முழக்கு, யானைமேலே நகார், குதிரை...என்ன தான் இருந்தாலும் ராஜகுமாரி இல்லையா? ஒட்டகமும் வந்துருக்கே, இந்த அஷ்டக் وسائي கோணல்லே என்ன ஒய்யார நடையடி? கொண்டையலங் காரம் குட்டி நாத்தனார் போல கழுத்து ஒடிப்புடி ஸ்படிகம் உடைந்தாற்போல் சிரிப்பு மணிகள் அவளினின்று தெறித்துத் தெருவில் ஓடின. அவள் சிரிப்பைக் கண்டு அவளே சற்று மிரண்டு போனாள். இதுபோல வயசு உதிர்ந்து சிரிச்சு எவ்வளவு நாளாச்சு அம்பி, சின்னக் குழந்தையாய் அவள் முழங்காலில் ஏற்றம் ஆடினபின் இப்போத்தான். சாமி அவர்களைத் தாண்டியதும் கூட்டம் சற்று நெகிழ்ந்தது. கையில் விலாசத்தை வைத்தபடி வழியைக் கணித்துக் கொண்டே, அட இதோ, தெருவும் வந்துாடுத்தே, கீழக் கோபுரத்துக்கு இவ்வளவு கிட்டவா? தினம் கோபுர தரிசனம், அம்பி கொடுத்து வெச்சவன்தான். நாப்பத்தஞ்சு, நாப்பத்தாறு...இதோ நாப்பத்தொம்போது. ஐயோ, மாடி ஏறணுமா? மெதுவா ஏறுங்கோ. கம்பியைப் புடிச்சுண்டு முன்னாலே போங்கோ, தடுக்கினாலும் நான் தாங்கிப்பேன். பரவாயில்லே-’’ - 'ஐயா, ரூம் நம்பர் பதிமூணு எங்கே?” “ஓ, காலேஜ் குமார் ரூமா, வாங்கோ வாங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/81&oldid=870458" இலிருந்து மீள்விக்கப்பட்டது