பக்கம்:மீனோட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#ftଈ) ጶ1 அவரோட அப்பா அம்மா...? சரி, சரி! நீங்க வருவீங்கன்னு. அவர் ஏற்கனவே சொல்லி இருக்காரு. டேய், யாரங்கே பையா. வந்தையாடா? வா. இவங்களை பதிமூனுக்கு அழைச்சிட்டுப் போ...” வணக்கம் ஐயா, வணக்கம் அம்மா. வாங்க. என் கையிலே ஒரு மூட்டையை கொடுங்க.” 'அட ராமா. இன்னொரு மாடியா? அட பாவி!” என்னங்க?’’ 'சொல்லாம கொள்ளாம சோத்து மூட்டெயெப் புடுங் கிண்டுட்டையே? ராவுக்கு வாயில் மண்ணைப் போட் டையா?” ஏற்கனவே நறித்த பாகற்காய் போன்ற அவன் உருவம் இன்னும் வெட்கத்தில், பச்சாதாபத்தில், திடீர் பயத்தில் குறுகிற்று. நான் என்னம்மா கண்டேன்? என்னை மன்னிச் சுக்கிடுங்க.” சரி, சரி. வழியைக் காண்பி. உன்னைச் சொல்லி என்ன பண்றது? ஈஸ்வரா பவுதான்யா தெருவுக்கு வந்தப்புறம் ஆசாரத்து மேலே ஆசை. கூழுக்கும் மீசைக்கும் இருக்கற ஒப்புறவுதான். பசி இப்பவே வயத்தெக் கிள்ளறது. சோத்து மேலே விபூதியைத் தெளிச்சுட்டு வாயிலே போட்டுக்க வேண்டியதுதான். சரி. இன்னிப்பொழுது இப்படி, அவர் வேணும்னா எனக்கும் சேர்த்துக் கூட நாலு காயத்ரி பண்ணட்டும்.’’ 'அம்மா சாவியைத் தர்றீங்களா?” இரு கதவுகளையும் விரியத் திறந்து, ஸ்விட்சைத் தட்டி விட்டு அவர்களுக்கு வழிவிட்டு, பையன் வெளியே நின்றான். புது உலகத்துள் நுழைவது போல் இருந்தது. எங்கு பார்த்தாலும் புஸ்தகங்கள் வழிந்தன. கட்டிலில், மேஜையில், நாற்காலியில், ஸ்டுலில், ஒன்றிரண்டு பாய்மேல் கவிழ்த்துப் போட்டு தரையிலும் சிதறுண்டு கிடந்தன. கால்பட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டாள். தன்னை அறியாமலேயே வரும் பழக்கம். இரண்டு புத்தகங்களை ஒதுக்கி அவரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/82&oldid=870459" இலிருந்து மீள்விக்கப்பட்டது