பக்கம்:மீனோட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி $5 உட்கார்ந்தால் உட்கார்ந்தபடி. நிலையைக் கலைக்காட்டா, அதிலேயே மலைச்சு நிப்பார். நான்தான் நேரம் பாத்து, வேளை பாத்துத் தபஸைக் கலைக்கணும். இப்பத்தான் போன மாசியில் மஞ்சக்காமாலை வந்தப்புறம் இப்படி ஆயிட்டார். முன்னாலே இவ்வளவு மோசமில்லை. இருந்தாலும் முன்னே யும், பின்னேயும் புதைச்ச பிறப்புகள் என்னைவிட இவரைத் தான் தாக்கி இருக்கு. ஆம்பிளைக்கு ஊமைக்காயம். ஆமாம், இவரைச் சாக்கிட்டு நானா? என்னைச் சாக்கிட்டு இவரா? இப்போதைக்கு என் தாலிபலத்தில்தான் அவர் கடிகாரம் ஓடிண்டிருக்குன்னு ஜோஸ்யனும், வைத்தியனும் சொல்றான். ஆனால் இந்த மஞ்சள் குங்குமமும் இவர் இல்லாமல் எனக் கேது? எது முன்னாலே? எது பின்னாலே? இதுபோன்ற இன்பகரமான ஆச்சர்யங்கள் அவளை அழுத்துகையில் லேசான பயம், திடீர் ஆதங்கம் கண்டது. இப்பவே அவர் முகத்தை உடனே பார்க்கணும். இது என்ன அசட்டுப் பரிவு? ஆனால் முழுக்கவும் அசடோ? பால்யம் திரும்பிப் போச்சா? அவருக்கா? எனக்கா? கோவிலைச் சாக்கிட்டு இதென்ன தேனிலவா? என்னம்மா சிரிக்கிறீங்க?" இரிச்சேனா என்ன? பாலை, வாங்கிக் கொண்டு திடுதிடுவென மாடியேறி வருகையில் பையன் கேள்வி கேட்ட படியண்டை அங்கே பதுங்கியிருந்த சிரிப்பு திரும்பவும் அவள் மேல் பாய்ந்து தோளில் தொத்திக் கொண்டது. முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கையில் அவள் தோள்கள் குலுங் கின. உள்ளுக்குள் வெட்கம், பால் கொழுக்கட்டை போல் அற்புதமான உண்டை உருளையாய் தித்திப்புடன் கழுத்து நரம்பில், நெற்றிப் பொட்டில், வகிடு நடுவில் உள்ளோடி கிளுகிளுத்தது. கிழங்களின் கொம்மாளம். என்னை இப்போது கிழம் என்று யார் சொல்லுவா? ஜன்னலுக்கு வெளியே வான் நீலத்தில் பிதுங்கிய ஸ்தூபி காலையின் மஞ்சள் வெய்யிலில் செம்பொற்சுடர்க் கொழுந்துவிட்டெரிந்தது. அம்பி சரியாத்தான் ஆசைகாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/86&oldid=870463" இலிருந்து மீள்விக்கப்பட்டது