பக்கம்:மீனோட்டம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德 மீனோட்டம் இருக்கான். அந்தத் தகதகப்பில் அத்துடன் அவளே பிழம் பானர்ற்போல் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை பயங் கர ரோமாஞ்சலி, கால்டியில் பூமி கிடுகிடுத்தது. அந்த பூகம்பம் அவளை உள்ளோடு அவள் சதையினின்று பிய்த் தெடுத்துக் கோயிலின் ஸ்தூபி உயரத்திற்குப் பந்தாடு கையில் வேண்டாம், வேண்டாம். தாங்க முடியலை, நான் முன்னாலோ, அவர் பின்னாலோ அது எங்கள் கையில் இல்லை. இப்போ தோன்றுவது அம்பிகே, இந்தத் தருணத்தை மட்டும் என்னை விட்டுப் பிடுங்காமல் என்க்கே கொடுத்து விடு. தாலியோடு பவழமாய், என் தவமணியாய், யார் கண்ணுக்கும் படாமல், எனக்குக்கூடத் தெரிய வேண் டாம், கோர்த்து அணிஞ்சுக்கறேன்.” காலடியில் பூமியின் நடுக்கம் மெதுவாய் அடங்கி படிப் படியாய் நிலை திரும்பி மேலே மெத்திகின்றது. ஸ்தூபி மேல் மஞ்சள் மாறுகையில் பச்சைக்கிளி அதன்மேல் பறந்துவந்து குந்துகிறது. ஏண்டிம்மா, நான் கேட்டதைக் கொடுக்க் நீயே நேரவே வந்துட்டையா? பச்சைக் கிளி, கோயில் ஸ்துTபிமேல் இறங்கிவந்து தன் இறகுகளை அழகாய்க் கோதிக் கொண்டது. அர்ச்சகர்களின் பல குரல்களில் அர்ச்சனை இரைச்சல் கோயிலிலிருந்து அறைக்குள் மிதந்து வருகிறது. அவரது உதடுகள் சப்தமற்ற அசைவில், உள்வந்த ஒலி யைத் தேவியின் நாம மந்திரத்தில் திரும்ப உருவாக்கி உதிர்க்கையில் அந்நந்நாமத்தின் அதனதன் நளினத்திற்கும் உக்ரத்திற்கும் ஏற்ப உதிர்ந்தது மலரா? குங்குமமா? மறு மலர். மறு குங்குமம். நாடி பூஜையில் நெஞ்சுக்கு நெஞ்சு நரம்புகளின் மறு மீட்டல். . தங்கள் விழுப்பும், புள்ளையாண்டான் சேர்த்து வைத் திருந்த அழுக்குகளையும் ஒருவாறாக நனைத்து, கசக்கி முதுகு நிமிர்வதற்குள் உச்சி வெய்யில் பட்டை வீறிற்று. வெறும் வயிறு வலித்தது. அந்த சுட்ட சப்பாத்தியை இப்போ முறித்துப் போட்டுண்டால் தொப்புளைத் திருகும். ஒண்னும் வேண்டாம். முதுகு வலி தீர படுத்துப் புரண்டால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/87&oldid=870464" இலிருந்து மீள்விக்கப்பட்டது