பக்கம்:மீனோட்டம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 8? இன்னிக்கு சாயந்தரமாவது அவரோடு கோயிலுக்குப் போகணும். சொர்க்கத்தினும் சுகமாய நித்திரைக்கும் விழிப்புக்கும் இடைவிளிம்பில் கண் சொக்கிற்று. “என்னம்மா, துரங்குறிங்களா? துரங்குங்க, துங்குங்க.' பாபி!-மனத்திற்குள் சபித்தாள். இனி துக்கமேது? எதிரே மசால் வடையைக் கடித்துக் கொண்டு முருகன் நின்றான் ஒண்ணு அஞ்சு பைசா. நாலணாக்கு வாங்கி வரட்டா. சூடா நல்ல மனம்மா-’ . . “என்னடா முருகா, சாப்பிட்டயா? என்ன சாப்பிட்டே?” 'முதலாளி வீட்டிலேந்து அவருக்கு சாப்பாடு வரும். மிச்சத்தைத் தின்னுப்புட்டு டிப்பனைக் கழுவறச்சே வயிறு என்ன ரொம்பிச்சோ அதான். குறைக்கு உங்களைப் போல இங்க்கொடுக்கற துட்டோ, பண்டமோ.” • * 'முருகா, உனக்கு கூடப்பொறந்தவா இருக்காளா?” 'அதுக்கென்ன குறைவு? முன்னால அண்ணன், அப் புறம் ஏழு அக்கா, அப்புறம் நான். . . . . . அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 'என்னடா, இந்த ரயில் வண்டிக்கு உங்க அண்ணன் டிரைவர். நீ கார்டா?’ ... " - - அவன் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. "அப்டா என்னப்ண்னறா? * : x . . . . "அப்பா வயசானவரு அம்மா பாங்கிலே வாசல் கூட்டி, தண்ணி எடுத்து வைக்கிறா. அண்டையில ரெண்டு கடைக்கு சாணி தெளிக்கறா ஏ.சண்ட் ஐயா வீட்டில் பத்து தேய்க்கறா. ஆனா அதுக்குத் தனி கூலி. இல்லை. ஏசண்ட் ஐயா சொல்றாரு பாங்க் சம்பளத்தோடு சேர்ந்து போச்சாம். அண்ணன், நாயர் கடையிலே மேஜை துடைக்கறான். பூனைக் குட்டி ஒண்ணு வளருது எங்க சம்பாதனை என்னத்துக்கு காணும்? இந்த புண்ணியத்தையும் குமாரய்யாதான் கட்டிக் கிட்டாரு.”

  • எந்தப் புண்ணியம்?’ . “எங்கம்ம்ாவுக்கு வேலை பண்ணிவச்சது அவருதான். அவன் கண்ணப்பு பறந்தோடி விட்டது. எழுந்து நிமிர்ந்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/88&oldid=870465" இலிருந்து மீள்விக்கப்பட்டது