பக்கம்:மீனோட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 . மீனோட்டம் "அந்தம்மா, இவருக்கு மேலே தள்ளாடறாங்க, அதுவே ஒரு சிரிப்பு. ரூமைத் துறந்து விட்டேன். முழுவா, ழெண்டு கப் ஷஅடா நாயர் கடை பெசல் டி. இந்தா, மிச்சத்தை நீயே வெச்சுக்க எதுப்பட்டியாட்டம் கெட்டியா பத்து ரூவாத்தாள். அவர் சொன்னாலும் எனக்கே ஜரிக்காது. ஆனால் டியைக் கொனாரத்துக்குள்ளே கதவு முடியாச்சு. தட்டுத் தட்டுன்னு தட்டறேன். ஊஹூம். பேச்சு மூச்சு இல்லே. ஒண்ணைக் குடிச்சேன். ஒண்ணைக் கொட்டினேன். சூடு ஆறிப் போவுதில்லே! வாசப்படியிலேயே நாயாட்டம் முடங் ஒட்ட்ேன். முளிப்பு வந்தப்போ கதவு திறந்தாச்சு. எப்போ திறந்தது எப்போ போனாங்க தெரியாது.” ஜன்னலுக்கு வெளியே கோயில் ஸ்து பிமேல் ஒரு பருந்து பறந்து வந்து அமர்ந்தது அதன் காலுக்கிடுக்கில் ஏதோ "அம்மா அம்மா ஐயாவைப் பாருங்களேன்-' முருகன் விழிகள் திகில் வட்டங்களாயின. அவர் உடம்பு கிடுகிடென ஆடிற்று. வாயோரம் எச்சில் வழிந்தது. பாய்ந்தோடிப் போய் அவரைத் தாங்கிக் கொண்டாள்.

  • முருகா, வண்டி கொண்டா-'

முருகன் கீழே ஒடினான். அவரைக் கட்டிலில் மெது வாய்ச் சாய்த்துவிட்டு ஒரு மாத்திரையைத் தண்ணிருடன் உன் செலுத்தியதும் நடுக்கம் சற்று அடங்கிற்று. ஆயினும் அவ்விழிகளின் வெறிச்சை அவளால் ஸ்ஹிக்க முடியவில்லை. பறித்துப் பறித்து ஒட்ட மொட்டையான கறிவேப்பிலை மரம். தொடுத்த மலர் சருகாய்க் கருகி உதிர்ந்து காற்றில் ஆடும் வெற்று நார். ஆற்று மணலில் அமாவாசை நள்ளிருள். அக்ரஹாரத்தில் ராப்பினம் இன்னும் எடுக்காமல் தெருவும் கோவிலும் உச்சி வெய்யில் பட்டினி. பயிர் அறுத்தபின் நடுப் பகலில் வயலில் தீய்ந்து நிற்கும் முளைகள். காலையில் குவளை பொங்கப் பால் தந்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/91&oldid=870469" இலிருந்து மீள்விக்கப்பட்டது