பக்கம்:மீனோட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 91 மந்தைக்குப் போன தாய் திரும்பாமல் காலிக் கொட்டிலில் ராப்பூரா கன்றின் அலறல். அவசர அவசரமாய்ப் பெட்டியுள் துணிமணிகளை அள்ளிப்போட்டு மூடி, மேல் உட்கார்ந்து அழுத்திமூடினாள். 'அம்மா, வண்டி வாசல்லே நிக்கிது. டாக்டர் வீட்டுக் குப் பெட்டி ஏதுக்கம்மா? ஐயாவை நான் பிடிச்சுக்கவா?” 'தொடாதே!’-சீறினாள். குழந்தை மிரண்டு பின்னி டைந்தான். அதுவும் தெரியறது. யார் மேல் தப்பு சொல்றது? நம்மேல்தான். வாசப்படி தாண்ட நாம் லாயக் கில்லை. அதுவும் தெரியறது. ஆத்துலே துளசி மாடத் துக்கு வெக்கற அகல் விளக்கு, தோய்க்கற கல்லுக்கடி யிலே, அப்படியே வடிச்ச கஞ்சியோடு பருப்பும் நெய்யும் பளபளக்க வெங்கலாப்பையில் காக்கைக்கு வெக்கற சோத் துக்கு மேல் புண்ணியம் இங்கே என்ன இருக்கு? கடப்பைக் கல்லில் சோத்துக் கரண்டியின் தட்டலே மணியோசை, 'கா' கா' குரல் கொடுப்பே வேத மந்தரம். முதல் 'கா' வுக்கே ரக்கை நிழல் கடப்பைக் கல்லில் தட்டுமே? எல்லாம் தெரியறது. தெரிஞ்சு என்ன பயன்? கொள்ளி போடன்னு எதிர்பார்த்துக் கொள்ளியையே பெத்துட்டேன். அதனால் இல்லை, எப்பவுமே எனக்கு இவர்தான்-- அவரைத் தாங்கிக் கொண்டு அவள் இறங்கினாள். அவர் கண்களில் வெறிச்சு, வாயில் சிரிப்பு. ஆனால் வாய்விட்ட சிரிப்பல்ல. அசட்டுச் சிரிப்பு. நல்ல வேளை இப்படியே இருந் தாலும் சமாளிச்சுப்பேன். "அப்பா, பஸ் ஸ்டாண்டுக்கு ஒட்டப்பா-” ஊருக்கு மேல் கோவில் ஸ்தூபி ஓங்கி) நின்றது. நீல வானத்தைக் கழுவேற்றிக் கொண்டு அதில் இப்போது கழுகுமில்லை; கிளியுமில்லை. இத்தனையும் பாத்துண்டு, கேட்டுண்டு தானே இருக்கே? எங்களை வேடிக்கை பார்க்கணும்னுதானே இங்கே இழுத்துண்டு வந்தே? ஏண்டி, நீயே இருக்கையா, இன்லையா? k * “என்னம்மா, ஏதாச்சும் சொன்னீங்களா?” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/92&oldid=870470" இலிருந்து மீள்விக்கப்பட்டது