பக்கம்:மீனோட்டம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் 95 போடறேன்னு சொல்லேன் வாயில் கொழுக்கட்டையா அட்டைச்சிருக்கு?” நல்ல வேளை! இப்படியெல்லாம் கேட்பீர்கள்...மண்ணில் கழுத்து வரை புதைத்துத் தலையை இடறுவீர்கள் என்று தெரிந்துதான் என் காதலை உங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆமாம்,கேட்கிறேன். காதலெனும் பேருக்கே இந்த பூச்சாண்டியா? அப்பா, அம்மா தாத்தா, பாட்டி எல்லாம் நீங்கள் இரவு உங்களைக் காலைப் பிடிக்கையில் சொன்ன கதை தானே! "நாளைக்கு நாளைக்கு’ என்று நந்தனுக்குக் கண்டது என்ன? மூன்றே நாளில் கண்ணப்பன் முத்தி கண்டது. என்ன? அவர்களுக்கு நேர்ந்தது எனக்கு நேரக் கூடாதா? "அவாள் எல்லோரும் அவதார புருஷாள். லோகத்துக்கு காண்பிக்க வந்தவாள் (என்னத்தை?) அறுவத்தி மூணு நாயன்மார்கள் நீ கேவலம்-சீ எதிர்த்தா பேசுறே? மூடு வாயை. எழுந்திருந்தேன்னா விசிறிக் கட்டை பிஞ்சுடும்.” அதனால்தான் உங்களைக் கேட்கவில்லை. ஆனால், அப்போ எல்லாமே வெறும் கதை தானோ? கன்யாகுமரிக்குப் போய் வந்த உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகள், கதைசொல்லி, மஹிமை சொல்லி, விசிறி விட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக் காற்றில் அந்திவானத்தின் வர்ணஜாலங்களில், காலை வேலையில் கடல் விளிம்பில், சூரியனின் உதய வாயில், கரையோரம் ஒடத்தின் நிழலில், கட்டைமரத்தின் மேல் சாய்ந்தபடி சிந்தனையில் கொழுந்து விட்டு, கண்டவர் கையோடு கொண்டுவந்த குங்குமம் கிளிஞ்சல் மாலை, சாய மண் என் கனவிற்கு கலவைகூட்டி, ஏக்கமாய்க் கட்டி, அதுவே அதிலேயே, அது வாய்ப்பந்தல் படர்ந்தது. சூர்ய உதயம், அஸ்தமனம் இரண்டுமே குமரியில் காணலாமாமே! அவள் மூக்குத்தியே மணிக்கூண்டாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/96&oldid=870474" இலிருந்து மீள்விக்கப்பட்டது