பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 98 பொறுப்பை அந்தக் குடும்பத்தின் மூத்த மகனான ஈஸ்வரன் பிள்ளையால் எப்படித் தட்டிக்கழிக்க முடியும்? பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் தம்பி தங்கைகளுக்குக் கல்யாணம் ஆன பிறகு - தாய் தந்தையர்கள் போன பிறகு - பார்வதி அம்மாள் கனவு கண்ட தனிக்குடித்தனம்’ வாய்க்கிறது. இப்போது, மகள் திருமணமாகிப் போன பிறகு மகன் ராணுவத்திற்குத் திரும்பிய பிறகு ஒருவித தனிக் குடித்தனம் நடத்தப் போகிறார்கள். 'இன்று எனக்கு நீ - உனக்கு நான் என்று இரண்டு பேருடைய தனிமையாகி விட்டது என்கிறார் ஈஸ்வரன் பிள்ளை. இந்திய இலக்கியங்களில் காணப்படும் குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமான தனிக்குடித்தனம்' பற்றிய அற்புதச் சித்திரத்தை இந்த நாவலின் ஒரு பகுதியில் வரைந்து காட்டி யிருக்கிறார் ஜெயகாந்தன். 다. இன்னொரு சித்திரம் - அகிலாவின் வாழ்க்கையை நேரடியாகப் பாதித்த அமிர்தம் டேவிட்டின் சிறுகதை. இரண்டாம் உலகப் போரின்போது ராணுவத்தில் பணியாற்றி ஒய்வுபெற்று, பாலசுந்தரம் படிக்கும் கல்லூரிக்கருகில் ஒரு சிறு கடை வைத்திருக்கிறார் டேவிட். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டிய பொருள்கள், பண்டங்கள் அவர் கடையில் இருந்தன. அவர் குழந்தைகளிடம் அன்பு பாராட்டிச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். மிட்டாய் கொடுப்பார். மிட்டாய் கொடுத்த ஒரு சின்னப் பெண்ணிடம் சிநேகிதம் வைத்து அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். அவள்தான் இருபது வயதேயுள்ள அமிர்தம். பாலசுந்தரம் படிப்பதற்குப் பல உதவிகளைச் செய்கிறார். அவனுக்கு ஒரு தந்தையைப் போல அன்புகாட்டி உருவாக்க முயல்கிறார். அமிர்தம் ஒரு பெண்குழந்தையை ஈன்ற சில மாதங்களில் டேவிட் நோய் வாய்ப்படுகிறார். சாவு நெருங்கிவிட்டது என்று தெரிந்ததும், பாலசுந்தரத்தையும் அமிர்தாவையும் பார்த்து "நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும்" என்கிறார். அவர் அன்புக்குக் கட்டுப்பட்டு பாலசுந்தரம் அமிர்தத்துடன் குடும்பம் நடத்துகிறான். டேவிட் பாலசுந்தரத்திடம் அமிர்தத்தை ஒரு தகப்பனைப்போல்