பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

來 மீரா கட்டுரைகள் : 99 ஒப்படைக்கும் காட்சியில் எள்ளளவும் விரசமோ விகாரமோ இல்லை. மாறாக ஒரு கண்ணியம், ஒரு கம்பீரம் இருக்கிறது. டேவிட் கற்றிருந்த வியாபாரக் கலையை பாலசுந்தரத் தால் கவிகரித்துக் கொள்ள முடியவில்லை என்பதை எவ்வளவு அழகாய் வருணிக்கிறர் ஜெயகாந்தன்: வியாபாரம் என்பது எல்லாரும் நினைக்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தில் ஒரு பொருளை வாங்கி இன்னொருவனிடம் விற்பது என்று அவன் நினைத்தி ருந்தான். அது அந்தக் கல்லாப் பெட்டியருகே உட்கார்ந்த பிறகுதான் கப்பலில் சுக்கான் பிடித்துச் செலுத்துகிற மாலுமியின் கடின உழைப்புக்குச் சமானம் என்று தெரிந்தது. அந்தக் கப்பல் எதிர்பாராது சூறைக் காற்றில் சிக்க வேண்டியிருந்தது.... பாய்மரம் கிழிந்தது. அலைகளில் தடுமாறியது. கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணிர் பெருகுவதைக் கண்டு தத்தளிக்க நேர்ந்தது. கடைசியில் கடன் என்ற பாறையில் மோதி அந்தக் கடைக்கப்பல் நொறுங்கியது.: மனதைக் கவர்ந்திழுக்கும் இந்தக் காவிய நடை - உருவக நடை ஜெயகாந்தனை மகாகவிகளின் மத்தியில் கொண்டு வந்து நிறுத்துகிறது. 다. இதேபோல் இன்னொரு கட்டம். தன் குற்றமுள்ள நெஞ்சைத் திறந்து காட்ட பாலசுந்தரம் முயல்கிறான். அந்த கனமான சூழ்நிலையை ஜெயகாந்தன் விவரிக்கிறார்: 'அவன் குழந்தையைக் கொஞ்சுவது மாதிரி மெல்ல அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவனது உஷ்ண மான சுவாசத்தில் அவளது செவிமடல்கள் தகிப்பன போலிருந்தன. “அகிலா.... எனக்கு.... எனக்கு ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கு. இப்போது அவளுக்கு செவிமடல்களும் தலையும் பற்றி எரிவது போலிருந்தது...'