பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியத்தில் ஜெயகாந்தன் 'தமிழ்ச் சிறுகதையுலகில் இன்றுள்ள காலப்பிரிவை ஜெயகாந்தன் காலம் என்று குறிப்பிட வேண்டிய அளவுக்கு ஜெயகாந்தன் கதைகள் இலக்கியத் தரமும் வாசக ரஞ்சகமும் உடையனவாகத் திகழ்கின்றன.... ஜெயகாந்தன் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன.' - சிவத்தம்பி இவ்வாறு ஈழத்திலிருந்து, தமிழகத்திற்கு வெளியேயிருந்து தரப்பட்ட பாராட்டு இதயபூர்வமானது. இந்திய வரலாற்றில் மெளரியர் காலம் மொகலாயர் காலம் என்பதுபோல தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் அவர் சொல்வதுபோல 'ஜெயகாந்தன் காலம்' என்று குறிப்பிட வேண்டியது தவிர்க்க முடியததாகும். இதை யாரும் பாராட்டி எழுதித்தான் தெரிவிக்கப்பட வேண்டுமென்பதல்ல. அவர் எழுதியுள்ள சிறுகதைகளே அதற்கு olá5Tl'.5usolo Guðlb 5pg|Luos (They speak themselves). D 'புதுமைப் பித்தனுக்குப் பிறகு தமிழ்ச் சிறுகதை உலகம் ஒரு பெருஞ்சிறுகதை எழுத்தாளனைப் பெற்றிருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்' என்பதை எந்த விமர்சகராலும் மறுக்க (էք ւգաT51, இவருடைய பாத்திரங்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பிரிவினராக இருப்பதில்லை. சமுதாயத்தின் எல்லாத்தட்டு மக்களும்