பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 103 பாத்திரங்களாக இவர் பேனாவால் இயக்குவிக்கப்படுகின்றனர். குறிப்பாக, கீழ் மட்டத்தி லுள்ள மக்களைப் பற்றி இவரைப்போல் விரிவாகத் தம் படைப்புக்களில் கையாண்டவர் எவருமில்லை. நடைபாதை வாசிகள், பிச்சைக்காரர்கள், கிளிஜோசியர், விலை மாதர், குட்டரோகி, ஆலைத் தொழிலாளி, அலி இப்படி யாருமே தொடாத பாத்திரங்களையெல்லாம் தொட்டுத் துலக்கியுள்ளார். ஏழைகளைப்பற்றி எழுதும் சமகால எழுத்தாளர்களான விந்தன், ஜெகசிற்பியன் கூட இந்த அளவு அடிமட்ட மக்களின் அவலம் பற்றி அணுகியதில்லை. அதிலும் இவர் அப்பாத்திரங்களின் மூலம் பிரச்சனைகளை அணுகியிருக்கும் விதம் அலாதியானது. வித்தியாசமானது. இவரது பாத்திரங்கள் அளவோடு பேசாமல் அதிகமாகவே பேசுகின்றன எனும் விமர்சனம் உள்ளது. (கோ. கேசவன்) அதற்குக் காரணம் ஜெயகாந்தனிடம் உள்ள சமுகநோக்கமே (Social Commitment) அதனால் அந்தப் பாத்திரங்களை அதிகமாகப் பேசவைக்கிறார். சிலரது கதைகளில் பாலியல், காதல் இவை தவறாமல் ஊடாடி இருக்கும். எல்லாவற்றையும், எதையும் சிறுகதை நாவல் மூலம் தரவல்லவர் என்பதனாலேயே இவரை சிறுகதை மன்னர் என்று நம்மை போற்றச் சொல்கிறது. ஆம் அது ஒரு அர்த்தமுள்ள பாராட்டு. அவரே ஒரு முன்னரையில் கேட்பது போல, 'காதலித்தவர்களைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தால் காதலிக்காதவர்களைப் பற்றி யார் எழுதுவது?’’ இதற்கு விடையாக, பாலியல் காதல் வாடையே இல்லாமல் ஒரு நாவலைத் தந்தவர். அதுதான் "ஒரு மனிதன், ஒரு வீடு ஒரு உலகம்' இப்படியும் எழுத முடியும் என்று அவர் சாதித்துக் காட்டிய நாவல் இது. - மானிட சமூகத்தின் வளர்ச்சியில், உழைப்புச் சக்தியினை மேம்படுத்த உதவியது சக்கரம் (Wheel). போக்குவரத்து, யந்திர சாதனங்கள் ஆகியவற்றின் அடிப்படையாக அமைந்தது சக்கரம். இது ஒரு கதையின் கருவாய் என்னமாய் ஜெயகாந்தனின் பேனாவால் பரிமளிக்கிறது பாருங்கள். -