பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 105 அமைந்து, குடும்ப அமைதி காக்கப்படுகிறது. அந்த மனைவி மற்றொரு கண்ணகியா அல்லவா என்பது வேறு. ஆனால் ஜெயகாந்தன் தம் பாத்திரங்களை மரபு வழி வாழ்ந்து காட்டச் செய்துவிடுகிறார். பிம்பம் ஆளுகை போன்ற கதைகளிலும் மரபு வழிச் சாயல் உள்ளது. ஒன்றில் மறுமணம் தீர்வு ஆகிறது. 'யுக சந்தி', 'புதிய வார்ப்புகள்', 'சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய கதைகளில் மரபுகளை மீறுகின்ற பெண்கள் படுகின்ற துவதிகள் பெருமளவில் சித்திரிக்கப்படுவதன் மூலம், ஆசிரியர் கதையின் அடிப்படையாகக் கொள்வது மரபு வழி நிற்றலே என்று கருத இடமளிக்கிறது. Ll ஜெயகாந்தன் தன் சொந்த வாழ்க்கையில் துணிச்சலை மனத்தில் இருத்தி தன்னம்பிக்கையோடு போராடி வந்திருப்பதைப் போலவே, பாத்திரங்களையும் தன்னம்பிக்கையுடையவர்களாகப் படைத் துள்ளார். அவருடைய எழுத்துக்களைப் படிக்கிற வாசகன் வெறும் அழுமூஞ்சித்தனமானவனாக (Pessimistic) g)göGvTLDgi şifüjpgi உடையவனாக (Optimistic) ஆகும் வாய்ப்பே உள்ளது. இனிப்பும் கரிப்பும் தொகுதியில் உள்ள 'பற்றுக்கோல்' கதையில் வரும் கிழவனின் ரிக்ஷா 'நடக்க முடியாதவர்களுக்காக நடக்க முடியாதவன் இழுக்கும் ஓடமுடியாத வண்டி காசநோய் கொண்ட அக்கிழவனிடம் காசுபறிக்க ரிக்ஷாவை போலீஸ் ஸ்டேசனுக்கு அவனைக் கொண்டு வரச் செய்கிறார் போலீஸ்காரர். அந்த வண்டி இல்லாமல் அவனுக்கு நடக்கமுடியாது. அதுதான் பற்றுக்கோல். ரிக்ஷாவைத் தரும்படி கிழவன் கேட்கிறான். போலீஸ் மறுக்கவும், தட்டிவிட்டால் எட்டுக் குட்டிக்கரணம் போடும் நிலையில் உள்ள அந்தக்கிழவன், 'வண்டி தரமுடியாதா? நானும் போக முடியாது” என்கிறான். அவனுக்குக் காந்தியடிகள் வந்து சத்யாக் கிரகம் செய் என்று கற்றுக் கொடுக்கவில்லை. ரிக்ஷா இல்லாமல் போனால் சாகத்தான் போகிறான். எனவே அடித்தாலும், பரவாயில்லை அசையமாட்டேன் என்று சொல்லுகிற துணிச்சலை அவனுக்கு