பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் ; 106 வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது. தனிமனிதனாகப் போராடுகிற தன்னம்பிக் கையை படிக்கிற வாசகனுக்கு ஊட்டுகிறது. 다. 'பெண்ணியம்' பெரும் எடுப்பில் பேசப்படுகிற இந்த காலகட்டத்தில், கற்பு பற்றிய ஜெயகாந்தனின் கருத்து பாரதியை போலவே இருவருக்கும் பொதுவானது என்பதே. இன்றைய சமுதாயச் சூழ்நிலையில், வன்முறையும் ஜன சந்தடியும் மிகுந்துள்ள நகரங்களில் வாழ வேண்டிய கட்டாயச் சூழலில் ஒருவரோடு ஒருவர் மக்கள் மெய் தீண்டாமல், பஸ்ஸிலோ, திரைஅரங்கிலோ, நகர முடியாது என்ற நிலையில் கற்புக்குள்ள இலக்கணங்களின் ԼIւգ, கண்டால், தொட்டால் போச்சு என்று சொல்லப்படுகிறதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. ஆக, கற்பு கவசமாக இருக்கலாமே ஒழிய விலங்காகி விடக்கூடாது. கல்லெறிகிறவர்கள் உள்ள தெருவில் விடு உள்ளவன் தன் ஜன்னல் கண்ணாடி உடைந்துவிட்டதே என்று ஜன்னலேயே தூக்கி எறிந்துவிட முடியாது. கண்ணாடியை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். கண்ணாடியை மாற்றுவது போல உடலால் பாதிப்பு ஏற்பட்டபோது அவளுக்கு 'கங்கா ஸ்நானம் செய்வித்து தாய் பாவமன்னிப்பு வழங்குகிறாள். ஒரு ஆண் இப்படிச் செய்துவிட்டு வந்தால் எந்தத் தந்தையும் தாயும் அது கூடச் செய்வதில்லை. அதைச் சொல்லாமல் விட்டிருக்கிறார் 'அக்கினிப்பிரவேசம்: கதையில், பாவம் போகட்டும் என்று. புதுமைப்பித்தனின் 'பொன்னகரம் கதையில் வருகிற பெண் _லை விற்பது விரும்பியா? அல்லவே. இன்றைய நகர வாழ்வில் இதே ஒரு அவல சந்தர்ப்பத்தில், புறச்சூழலின் தாக்குதலில், ஒரு பெண் ஆணின் இச்சைக்குப் பலியான நிலையில் அவள் வாழ்வை இருளடிக்கச் செய்துவிடுவதா? உடனடியாக அதற்கு ஏதோ ஒரு பரிகாரம்.... 'அழுக்கை நீக்க ஒரு குளியல் வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு, இதைக்காட்டிலும் புரட்சிகரமாக ஒரு தாய் என்ன செய்துவிட முடியும், அந்தக்கதையின் நாயகிக்கு கங்கா என்று பெயர் வைத்ததிலேயே இது அறிமுகத் (Symbolic) தன் நோக்கத்தை உணர்த்திவிடுகிறார். இந்தியப் பெண் குலத்தின் குறியீடாக கங்கையைக் காண்கிறார்.