பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் . 107 கங்கை இமயத்தில் தன் பயணத்தைத் தொடங்கும்போது, அதன் நீர் ஸ்படிகமாக, பனிக்கட்டிகளாக, கண்ணாடிப்பாளம் பாளமாகத்தான் புறப்பட்டு வருகிறது. இடையில் போகப் போக சுற்றுப்புறச் சூழல் கேடுகளால் எத்தனையோ அழுக்குகள் வந்து கலக்கின்றன. இருப்பினும், அதை உயர்வாய், உன்னதமாய் ஏன் புனிதமாய்க் கருதுகிறவர்கள், கங்கை அழுக்கடைந்து விட்டது என்று ஒதுங்குவது மில்லை ஒதுக்குவதுமில்லை. அதுபோல சூழல் கேடுகளால் பெண் கெடலாம்; கெடுக்கப்பட்டலாம். ஆனால் பெண் தான் மனதறிந்து கெட்டாலன்றி, அந்தப் பெண் புனிதமானவளே, பவித்திர மானவளே. கங்கை மாசுபட்டு விட்டது என்று அதைக் குளிப்பாட்ட முடியுமா? மங்கையும் கங்கையும் ஒன்றுதான்.... என்று காட்டவே கற்பு நெறி ஒரு பிரச்சினையாக, கேள்விக்குறியாக ஆக்கப்படுகிற, தன் கதையின் நாயகிக்கு மிக சமத்காரமாக, அதே சமயம் பொருத்தமாக, ஒரு தத்துவதரிசனம் தரும் முறையில் 'கங்கா' என்று பெயர் சூட்டியிருக்கிறார். இவரது பாத்திரப் பெயர்கள் மட்டுமல்ல, கதைத் தலைப்புக்கள் கூட அப்படிப்பட்டனவே. இலக்கணம் மீறிய கவிதை'யில் வருகிற லிங்கன் வேண்டுமென்றே அல்ல, தன் இயலாத நிலையில் உடற்பசியை தற்காலிகமாக தீர்த்துக் கொள்வதற்கு விலைமாதரை நாடுவதை விவரிக்கிறார். இங்கே இலக்கணம் அற்ற கவிதை என்று சொல்லாமல் மீறிய கவிதை என்று குறிப்பிடும்போது தெரிந்தே மீறுகிற தெம்பு புலப்படுகிறது. இலக்கணம் மீறப்பட்டாலும், அதுவும் கவிதைதான் என்று சொல்லுகிற துணிச்சல் தெரிகிறது. 다. சிறுகதைகளும் நாவல்களும் இந்த இலக்கியச் சிங்கத்தின் எழுத்தாக்கங்களில் சிங்கத்தின் பங்கு (Lion's Share) வகித்தாலும் இவரது கவிதைகளும், கட்டுரைகளும், திறனாய்வு திரண்டிருக்கும் முகவுரை (Preface)களும், இதழியல் கருத்துரைகளும் (Journal Articles) தமிழ் இலக்கியத்திற்கு தரம் சேர்த்தனவே. 'இலக்கியம் என்பது ஒரு சமுதாயத்தின் ஆத்மா என்றும் எழுத்தாளன் அத்தகைய ஆத்மாக்களோடு தொடர்பு கொண்ட என்சினியர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது' என்பார் ஜெயகாந்தன் (பிரளயம் முன்னுரை)