பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்சிமொழி பைந்தமிழே 令 (1) ஆங்கிலம் இடம் பெயர்கிறது.... அவ்வளவே தமிழ் பயிற்றுமொழி ஆகக் கூடாது என்று கூறுமளவுக்குத் தமிழ்நாட்டிலேயே ஒரு கூட்டம் புறப்பட்டுவிட்டது. சந்தனத் தமிழுக்குகாகப் பலர் வெந்து சாம்பலான பின்னரும் வயிற்றுப் பிழைப்பு, வாதப் பிரதிவாதம், ஆங்கிலத்தின் அகில உலகச் சிறப்பு முதலியவற்றைக் கூறி எப்படியோ எதிர்ப்பை எழுப்பிவிட்டது. ஒரு சில நாட்களுக்கு முன்பு பயிற்று மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் அரசு, ஆய்வுக் குழு ஒன்றை நியமித்துவிட்டது. கல்வியில் பெரியவர்கள் அடங்கிய அக்குழு விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கத்தான் போகிறது. என்றாலும் வாதத்திற்காகத் தமிழ்ப் பயிற்று மொழித் திட்டத்தைத் தமிழகம் கைவிட்டுவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஆங்கிலம் மூலம் பயிலும் நம் மாணவர்கள் ஒரு சிலர் வெளிநாட்டிற்கும் மிகப் பலர் வெளிமாநிலங்களுக்கும் வேலை தேடிச் செல்ல முடியும் என்பவர்கள் அப்போதாவது இவர்கள் வேலைவாய்ப்புக்கு உறுதி தரமுடியுமா? இன்னும் சில ஆண்டுகளில் பல வடஇந்திய மாநிலங்களில் அவரவர் தம் தாய்மொழியிலேயே பயிற்றுமொழியாக முழுமை அடைந்து விடும்.