பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்பி கவிதைகளில் பெண்ணியமும் தலித்தியமும் சூரிய மையத்தில் வெப்பம் எடுத்து ஆர்க்டிக் மடியை உருக்கும் நெருப்பு எழுத்துக்கள் நமக்கு வேண்டும். என்கிறார் கவிஞர் சிற்பி. கவிஞர் சிற்பியின் எழுத்துக்களில் அத்தகைய வெப்பத்தின் வீச்சினை வெகுவாகக் காணமுடிகிறது. 1947க்கு முன்பு கவிஞர்கள் பலரின் எழுத்துக்களில் விடுதலைக் கனல் கொழுந்துவிட்டு அனல் கக்கியது. பின் வந்த கவிஞர்களின் எழுத்துக்களில் பகுத்தறிவுச்சுடர், திராவிடப் பண்பாடு, பொது வுடைமைத் தாக்கம் விரவி வருதல் இயல்பாய் இருந்து வந்துள்ளது. அண்மைக் காலத்தில், இந்தப் போக்கில் புதிய மாறுதல்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இந்த மாறுதல்கள் உலகம் தழுவியதாகவும் அனைத்திந்திய அளவிலும் நிகழ்ந்து வருவனவாகும். 다) பெண்ணியம் இன்று உலகளாவிய ஒரு இயக்கத்தின் குறிக் கோளாக கொடி உயர்த்தப்பட்டுவிட்டது. தலித் இயம் அனைத் திந்திய அளவில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்ட ஒரு இயக்கத்தின் இலட்சியமாகி விட்டது. பெண்ணியத்திற்கும் தலித்தியத்திற்கும் பெருங்குரல் எழுப்ப இன்று பல கவிஞர்கள்-படைப்பாளிகள் உள்ளனர். எனினும் கவிஞர் சிற்பி இந்த வகையில் ஒரு முன்னோடி யாக விளங்கி வந்துள்ளார்.