பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 1.10 சர்ப்ப யாகம் (1976) தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒ சகுந்தலா சிகரங்கள் பொடியாகும் ஆகிய கவிதைகள் குறிப்பிட்டுச்சொல்லக் கூடியனவாய்ச் சிறந்து விளங்குகின்றன. D பெண்ணியம் என்பது தான் என்ன? 'குடும்பத்திலும் வேலை செய்யுமிடத்திலும் பெண்கள் தாழ்த்தப்படுவதையும் கரண்டப் படுவதையும் மாற்ற எடுக்கும் உணர்வுபூர்மான நடவடிக்கையே பெண்ணியம்' என்று பெண்ணிய இயக்கத்தினர் கூறுகின்றனர். ('பெண்ணியம்' - காவ்யா தொகுப்பு பக்.3) பாரதிதான் தொலைநோக்கோடு நாட்டு விடுதலைக்கு முன்பே வீட்டு விடுதலை வரவேண்டும் என்பதற்காக பெண்விடுதலை, பெண்கள் விடுதலைக்கும்மி, புதுமைப் பெண் என்றெல்லாம் பாடி இந்த நாட்டில் அந்தக் கொடியை ஏற்றி வைத்தான். 'வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். என்றும் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப்பெண்கள் விரைவிலொழிப்பராம்: என்றும் "மாதர்க் குண்டு சுதந்திர' என்றும் பாடிப் பெண் விடுதலைப் பேரியக்கத்திற்கு வித்திட்டான். ஆனால் இன்று புதிதாகப் பிறந்தது போலே மேலைநாடுகளில் பெண் விடுதலை இயக்கங்கள் பேசப்படுகின்றன. பாரதிக்குப் பின் பாவேந்தர் பாரதிதாசனும் தாம் சார்ந்த இயக்கத்தின் குறிக்கோளாம் சமூக சீர்திருத்த நோக்கில் பல பெண் விடுதலைப் பாடல்களைத் தந்துள்ளார். தென்னாட்டில் பெரியாரும் வடபுலத்தில் மராட்டிய மகாத்மா என்று போற்றப்படும் பூலேயும் பெண்ணடிமைத் தனத்திற்கும் ஒழுக்க மதிப்பீட்டிற்கும் உள்ள உறவுகளை முதன்முதலாக தீவிரமான கருத்துக்களால் வெளிப்படுத் தினர். ஏங்கல்ஸ் பெண்கள்