பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 112 துருவாசர் சாபத்தாலேயே துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தானென்ற கதையை நடத்துவதன் மூலம் அவ்வேந்தனை உயர்த்திவிடுகிறான் கவிஞன். ஆனால் அத்தகைய மறதி துஷ்யந்தனுக்கு இயல்பான ஒன்றே என்பதையும்..... பெண்களைத் தேனொழுகப் பேசி வசப்படுத்துவதும் பின்னர் வஞ்சிப்பதும் துஷ்யந்தனது இயல்பே என்பதை இவ்வாறு புரிய வைக்கிறான் கவிஞன். (இளங்கோவடிகளின் பாத்திரப்படைப்பு: ப.74) -இவ்வாறு டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் ஆடவரை உயர்த்தி விடுவதற்காக சாகுந்தலத்தில் துருவாச கோபத்தை நுழைத்திருப் பதாகக் கண்டு சொன்னபோதிலும் துஷ்யந்தன் பெண்களை வசப்படுத்தி வஞ்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டவன் என்பதை மறைமுகமாகப் புரிய வைத்துள்ளான் காளிதாசன் என்று கூறியிருக்கும் பெண்ணியக் கருத்தை, முதன்முதலாக சிற்பி "ஒ சகுந்தலா மூலம் கவிதையில் கொண்டு வந்தார். கானகத்தில் வாழும் கள்ளமறியாப் பெண்ணை ஏமாற்றிய உனக்கு துஷ்யந்தன் என்ற பெயரும் ஒரு கேடா? என்று கேட்பதுபோல, அவனின் துட்டத்தனத்தை உள்ளடக்கி துஷ்டந்தன்' என்று பெயரிடு கிறார். துஷ்டனைக் கண்டு சகுந்தலை தூர விலகியிருந்திருக்க வேண்டும்! ஆனால் அவள் ஏமாந்தாள். அது மட்டுமா? அவனுக்கு துரோக அடைமொழி தந்து துரோக துஷ்டந்தன்' என்று அழைக் கிறார் கவிஞர் சிற்பி. ஆனால் இன்றைய புதுமைப் பெண்கள் கண்வ ஆசிரமத்து சகுந்தலைபோல மோதிரங்களைத் தொலைத்துவிட்டுத் தொல்லைப் படுவதில்லை. 'விசுவ எத்தர்களும் துரோக துஷ்டந்தர்களும் இன்னும் எங்களில் இருக்கின்றார்கள் ஆனால் எமது சகுந்தலைகள் இப்போது தொலைப்பது மோதிரங்களை அல்ல! - பொருந்தாத காதலை!' என்று முன்னேறிவிட்ட பெண்ணியல் நிலவரத்தை கவிதையில் பதிவு செய்துள்ளார் சிற்பி.