பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 113 வரைவ தென்னடி? காதல் விகிதமோ? என்று ஒவ்வொரு பா முடிவிலும் வருவது சகுந்தலையின் நெருக்கத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. 다. இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக உள்ள தலித் மக்களின் எழுச்சி 40 ஆண்டுகளுக்கு முன்பே மராட்டியத்தில் வீறு கொண்டுவிட்டது. இங்கே அரிசனராகவும் ஆதிதிராவிடராகவும் தாழ்த்தப்பட்டோராகவும் பெயர் சூட்டப்பட்டு வந்தோர் அங்கு தலித் ஆகிவிட்டனர். தலித் என்றால் ஒடுக்கப்பட்டவன் என்று பொருளாம். முன்பு பொதுவுடைக்கட்சி போன்ற அமைப்பு ரீதியான இயக்கங்களின் மூலம் அணிதிரண்ட விவசாயக் கூலிகளாக விளங்கி வந்த தலித்களுக்குக் கிடைத்தது சாட்டையடி, சாணிப்பால், குடிசைகளுக்குத் தீ. இந்நிலையில் ஒடுக்கப்பட்டோர் தங்கள் போரினை பல தளங்களிலும் நிகழ்த்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். அந்த வகையில் இலக்கியம் தலித்களுக்கு ஒரு ஆயுதமாக உதவுகிறது. தலித் இலக்கியம் எழுதுவோரும் தலித் ஆகத்தான் இருக்க வேண்டுமா? இக்கேள்விக்கு மராட்டியத்தின் தலித் இலக்கிய வாணர் அர்ஜுன்டாங்ளே பதில் தருகிறார்: "ஒடுக்கப்பட்டோ ரல்லாத எழுத்தாளர்கள் தங்களை ஒடுக்கப்பட்டோர் என அழைத்துக்கொள்ள விரும்பு வதில்லை” எனவேதான் தலித்களைப் பற்றி இலக்கியம் தலித்களிடமிருந்தே எதிர்பார்க்கப்படுகிறது. தலித் இலக்கியத்தின் தோற்றம் எப்போது நிகழ்ந்தது? மராட்டியில் பாபுராவ் பாகுலாலால் படைக்கப்பட்டு அறுபதுகளில் வெளிவந்த சிறு கதைகள் தலித் இலக்கியத்திற்கு மாபெரும் வேகத்தைத் தந்தவை. ஒடுக்கப்பட்டோரின் இலக்கியம் உருக் கொள்வதற்கு பாபுராவ் உதவியதோடு மனதில் பீறிடும் எண்ணங் களையும் படைப்பாற்றலையும் எவ்வாறு இணைப்பது என்று காட்டியதன் வழியாக பல எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாகவும் அவர் விளங்கினார். (அர்ஜுன்டாங்ளே, 'தலித் இலக்கியம்' ப.28-29)