பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 115 இரையான அருக்காணி காலனின் பசிக்குப் படைக்கப்படுகிறாள். இங்கே கவிஞரின் பார்வை எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். ஜாதிக் கட்டு மலைபோல் இருந்தாலும் நொறுங்கத் தொடங்கிவிட்டது. எதிர்த்துக்கேட்கும் துணிச்சல் சேரியிலும் எழுந்துவிட்டது. எனவே 'குன்றுகள் அந்தப்புயலின் தமது சிகரங்கள் பொடியாகும்: என்று முடிக்கிறார். இந்தக் கவிதையில் எடுத்துக்கொண்ட கருத்தமைவின் நோக்கத் இற்கு ஏற்ப கவிதை அர்த்தச்செறிவும் ஆழமும் மிக்கதாக விளங்குகிறது. குடிசைகள் வெண்மணி களாக்கப்பட்டதை, நெருப்புக்காளி தன் அக்கினி முகத்துடன் செம்பட்டைக்கூந்தல் சிதறிக்குலைய நிர்வாணக் கூத்து நிகழ்த்திக் கொண்டிருந்தாள்' என்பார். படிக்கும்போதே நெருப்புச்சுவாலை நம்மைத் தகிப்பது போல உணர்த்திவிடுகிறார். பண்ணையாரின் காமவெறியைக் கவிதை வரிகளாக்கும் போது ‘‘............... சேரிப்பெண்களின் மானத்துக்கு அவர் எப்போதுமே ஒரு மயான பூமி: என்கிறார். அவர்களின் மானத்துக்கு மட்டுமல்ல உயிருக்கும் எமனாக விளங்கும் கொடியன் என்று குறிப்புக்காட்டி விடுகிறார். என்னதான் பண்ணையார்கள் தங்கள் ஆதிக்க ஆட்டங்களைத் தொடர்ந்தாலும் இனி இவர்கள் விடமாட்டார்கள், ஏனெனில் அவர்களின் ஆத்திரமும் ஆவேசமும் சத்திய வேட்கையின் வெளிப்பாடு என்பதை - 'திண்ணையின் மீதொரு யானை பிளிறியது . எனினும் சத்திய அன்ப தன் பயணம் தொடர்ந்தது' என்று பொருத்தமான சொற்களில் வடித்துக் காட்டுகிறார். கதிரவன் ஒளியும் புகமுடியாக் கானகம் பூனாச்சி மலையடி வாரமுள்ள சுருளியாற்றுக்காடு என்பதனை