பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 116 'உச்சிச் சூரியனை உள்வாங்கி விழுங்கும் கானகத்தின் இதயத்தில் புதைய ஒரு சிறு கும்பல் சின்னான் தலைமையில் ஓடிக் கொண்டிருந்தது' அந்த ஓட்டம் நிற்கும் வரை தலித்களுக்குத் தனியாக ஒரிலத்திய இயக்கம் தேவை. அதை இன்று பல எழுத்தாளர்கள் தொடங்கிடு வதற்கு முன்பே அறிவுப்பூர்வமாக உணர்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட்டுத் தம் பங்களிப்பை தலித் இலக்கியத்திற்குத் தந்தவர் சிற்பி. 다. எழுபதுகளில் துருவ வெள்ளியாய் வானம்பாடிகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தபோது உன்னதப் படைப்பாளியாய்ப் பரிணமித்த சிற்பி இன்றுவரை ஒளிவீசும் ஞாயிறாய்த் திகழ்கிறார். அந்த வானம் பாடிக்கு வயது அறுபது. எனினும் புதிய போக்குகளை, காலத்தின் தேவையுணர்ந்து, பற்றிக்கொண்டு பாடுவதில் இந்தக் கானம் பாடிக்கு என்றும் வயது இருபதுதான். ↔ •,• கவிஞர் சிற்பி மணிவிழாமலர்