பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 120 அசைவரிசை மாற்றங்களே அசை மாற்றங்களுக்கு அடிப்படை. ஜப்பானியக் கவிஞர்கள் நீண்ட கவிதைகளை விடவாகா, தன்கா போன்ற குறும்பாடல்களையே விரும்பினர். மேல்ஸ்டராபி, (5,75) இழ்ஸ்ட்ராபி (7,7) என்று அது இரு பகுதிகளாக அமைந்தது. ஒருவர் முன் பகுதியைப் பாட மற்றவர் பின் பகுதியைப் பாடுவார், நமது இரட்டைப் புலவர்களைப்போல. ஜப்பானிய அரசவையில் கவிஞர்களிடையே இதுபோன்ற கவிதை அரங்கங்கள் நிகழ்ந்தன. டாங்கா எனப்படும் கவிதை வடிவத்தில், முதல் 3 வரிகள் தரப்படும். போட்டியிடுவோர் இவ்வாறு 3 வரிகளைத் தரும் இந்த உத்திதான் ஹைகூவின் விதையாக அமைந்தது. பின்னால் அதுவே ஒரு கவிதை வடிவமாகி விட்டது. ஹைக்கூவின் ஆதிப்பெயர் "ஹொக்கூ' என்பதாகும் தற்போது அது 'ரெங்கா"வின் தொடக்க கவிதையின் பெயர் ஆகிவிட்டது (ரெங்கா என்பது ஒருவர் முடிக்க அதிலிருந்து அடுத்தவர் தொடரும் படி அமைந்தது) ஹைகூவைப் புரிந்துகொள்ள வாசகன் பலமுறை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய தோற்றம் ஒரு புதிய செய்தி கிடைக்கும். அதற்கு வாசகன் கவிதையோடு கலக்கவேண்டும். இலயிக்க வேண்டும். 'ஆடவாரீர்! என்னோடு ஆடவாரீர்'... 'பாடவாரீர்... பாடவாரீர்” என்ற மாரியப்ப சுவாமிகள் பாடலில் வருவது போல 'ஹைகூ கவிதைப் பெண்ணாள் நம்மைக் கூவி அழைக்கிறாள். ஆடலரங்கில் வெறும் பார்வையாளனாக இல்லாமல் ஆடலில்,பங்கு பெறுவதுபோல ஹைகூவின் வாசகனாக ஒருமுறை படித்து நிறுத்திவிடாமல், அதன் படைப்பாளியே நாம் எனும்படி அதில் லயித்துப் படிப்போமானால் அதன் நிறைவான பொருள் விளங்கும். ஜப்பானிய ஹைகூவின் கர்த்தாக்களாக நால்வர் சுட்டப்படு கின்றனர். பாஷோ (1644-1694), பூஸன் (1716-1783) ஐசா (1763-1827), ஷிகி (1867-1902) இவர்களில் பாஷோவையே ஹைகூவின் பிதாமகர் அல்லது ஆதிகவி எனலாம். பாஷோ சமய உணர்வாளர். பூஸனுன் யழகு உணர்வாளர். ஐசா- மனிதநேயக் கோட்பாட்டாளர். விகி பூலன் வழியைப் பின்பற்றுபவர். இவர்கள் தங்கள் ஹைகூக்களில் குறியீடுகளைப் புகுத்தினர். தாங்கள் உணர்த்த விரும்புவதை மறைபொருளாக மிகவும்