பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 125 கல்லறை என்றாலும் அங்கு செர்ரி பூக்கவில்லையென்றால் சோகத்திற்கும் மேல் இன்னொரு சோகமாகத் தோன்றுகிறது. மாண்ட வீரனை மலர்களால் அர்ச்சிக்க வேண்டாமோ? நியாயமான அங்கலாய்ப்பு. ஜப்பானிய கவிதைகளுக்கென்று ஏராளமான இதழ்கள் வெளி வருகின்றன. இங்கிலாந்தில் கூட கவிதைக்கென்றே வந்து கொண்டிருந்த இதழ் (Encounter) நின்றுவிட்டது. ஜப்பானில் டாங்கா வளாகக் கவிதைகளாக 50 இதழ்கள் வருகின்றன. ஹைகூக்களை வெளியிடவென்றே 50 இதழ்கள் (அத்தனையும் வணிக ரீதியிலானவை) வருகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 10இலட்சம் ஹைகூ கவிதைகள் வெளியிடப்படுகின்றன. மேற்கண்ட எண்ணிக்கைகளோடு ஒப்பிடும்போது தமிழ் இதழ்களில் வெளிவரும் ஹைகூக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. தமிழில் ஹைகூ முன் சொன்ன பெரிய இதழ்கள் தவிர வானம்பாடி, செம்மலர், ஆல், அன்னம் விடுதூது, கவி, காந்தடி, மருதம், முழக்கம், நந்தவனம், தமிழ்ப்பாவை, முகில், சாரதா முதலிய பல்வேறு இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பல இதழ்களின் பெயர்கள் இங்கே விடுபட்டி ருக்கலாம். தமிழ் நிலத்தில் அந்தக் குட்டை மரம் செழித்து வளர்ந்துள்ளதா என்று பார்ப்போம் ஏ.சி. திரையரங்கு நெருப்பாய்ச் சுட்டது டிக்கட் விலை (இரா. நாகராஜன்-செம்மலர் 12/93) குளுகுளு தியேட்டரில் அமர்ந்திருந்தும் அதை அனுபவிக்க முடியவில்லை. காரணம் டிக்கட் விலை விலையைப் பற்றிக் கவலைப்படாதவன்தான் ஏ.சி.க்குப் போக வேண்டும் என்பது மறைவாய் உணர்த்தப்படுகிறது. ஏழைக்கு ஏது ஏ.சி. ? மலட்டு மரம் பூத்தது ஒலி பெருக்கி (இரா எட்வின் - கவி 8/1991)