பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 26 மலடு கருவுறப் போகிறது என்பது அரிய செய்திதான். அதைப் பூவாகச் சித்திரித்திருப்பதும் ஒரு தனி அழகுதான். 'போதன் வில்லா பூக்கள் ஒலிபெருக்கி மாதிரி தோற்றம் தரும் அப்படித்தான் கவிஞனுக்கு அந்த நடப்பட்ட மரத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி தோன்றியது. விளைவு மேற்கண்ட ஹைகூ. என்னைக் கேலிச்சித்திரம் வரையும் துணிச்சல்கார ஓவியன் எனது நிழல் (சிற்பி -ஆல் 3.4/92) நிழலை கேலிச்சித்திரமாக உருவாக்கிறார் சிற்பி. பருக்கள் தோன்றியதோ? சாலைகளின் முகத்தில் மேடு பள்ளங்கள் (கழனிவாய் மா. காளிதாஸ். - நீர்கதிர் 30.1.94] சாலையின் மேடு பள்ளங்கள் மனித லஷணத்தில் பருக்களாக உருவகிக்கப்பட்டுள்ளன. பட்டிற்கு ஆசை கூட்டுப் புழுக்கள் வெண்ணிரில் (ஹாமில் - மருதம் 3.6.92) மனிதனுக்குப் பட்டின் பேரில் ஆசை விளைவு கூட்டுப் புழுக்கள் வெண்ணிரில் சாகடிக்கப்படுகின்றன. இதை வார்த்தைகளைச் சிக்கனமாகக் கையாண்டு தந்தி அடிப்பது சில சொற்களே சொல்லி வரிப்படுத்தியுள்ளார். வளர்ந்தாலும் மண்ணை மறக்கவில்லை இறங்கும் விழுதுகள் (அமுத பாரதி - சாரதா/11/93) மண்ணை நம்பி மரமிருக்கு, ஐலசா என்று நாட்டுப் பாடலில் வருவது போல விண்ணை நோக்கி வளர்ந்தாலும் மண்ணை மறக்காத, நன்றி மரத்திற்குக் கூட உண்டு. விலங்கினங்களில் நாய்க்கு நன்றி உணர்வு உண்டு. அது போல மரங்களில் ஆலமரத்திற்கு உண்டு! ஏ, மனிதா இப்படிச் சொல்லிக்கொள்ளும் படியாக உன்னிடம் நன்றி உணர்வு