பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவின் திரை உரையாடல்கள்

அரசியல்வாதியான அண்ணா பத்திரிகை உலகிலும் இலக்கிய உலகிலும் நன்கு அறிமுகமான பின்னர் நாடக உலகிலும் திரை உலகிலும் அடி எடுத்து வைத்தார். சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் போன்ற நாடகங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருந்த அண்ணாவை முதன்முதலில் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பாகவதருடன் ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டு சிறை சென்று திரும்பிய என்.எஸ். கிருஷ்ணன் மேடையில் நடிப்பதற்காக அண்ணாவிடம் எழுதி வாங்கிய நாடகம் தான் நல்லதம்பி, எனினும் அது மேடை ஏறாமல் நேரடியாகத் திரைப்படமானது. 다. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் போன்ற அண்ணாவின் நாடகங்களைப் பார்த்தவர்களுக்கு நல்லதம்பி திரைப்படம் வித்தியாசமாகத் தென்பட்டிருக்கும் காரணம் அதில் இன உணர்ச்சியைத் துண்டும் கதை அமைப்போ கனல்கக்கும் வசனங் களோ இல்லை.