பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 130 இதற்குப் பிறகு அண்ணாவைத் திரைஉலகம் சிக்கெனப் பிடித்துக் கொண்டது. மாலை மயங்கியது முதல் பொழுது விடியும் வரை ஒரு வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வைத்து ஒரே இரவில் எழுதப்பட்டது; இரவும் ஐரோப்பிய வரலாற்றில் மதவாதிகளிடையே புரட்சி செய்த மார்ட்டின் லூதரை மதிவாணராக்கி எழுதிய சொர்க்கவாசலும் அண்ணாவுக்கு செல்வாக்குப் பெற்றுத் தந்த படங்கள். இவைதவிர அண்ணாவின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் படங்கள் காதல் ஜோதி, எதையும் தாங்கும் இதயம், நல்லவன் வாழ்வான் ஆகியவை. அண்ணாவின் திரைப்படக் கதையிலோ கருத்திலோ பெரிய புரட்சி ஏதும் இல்லை என்பவர்கள்கூட அண்ணாவின் தமிழ் வசனத்தில் உயிர் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். "என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார் என்றேனும் தமிழருமை உணர்த்துவதாய் இல்லை என்றேனும் உணர்வேத்தும் அமைந்ததுவாய் என்று பாரதிதாசன் அன்றைய தமிழ்த் திரைப்படம் பற்றி விமர்சனம் செய்தார். தேவதைகள், அவதார மகிமைகள், அடியவரின் பக்திப் பரவசங்கள், பத்தினிகளுக்கு நேரும் சோதனைகள், வேதனைகள் - இவற்றையே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு அண்ணாவின் சாதாரண சமூகத்தை விட அதிசயமாய்த் திகழ்ந்தது. பிரபோ ஸ்வாமி நாதா என்ற வசனங்களைக் கேட்டுப் புளித்த காதுகளுக்கு அண்ணாவின் தமிழ் தேனாய் இனித்தது. வெண்பாவுக்குப் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவுக்குக் கம்பன் என்பதைப் போல ஒரு காலத்தில் அடுக்கு மொழிக்கு அண்ணா என்று சொல்வதுண்டு. பேச்சில் மட்டுமல்ல திரைஉரையாடல்களிலும் கூட அண்ணா அடுக்கு மொழியைப் புகுத்தி அழகு பார்த்தார்.