பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 1.31 வேலைக்காரியில் வேலைக்காரி அமிர்தத்திடம் பரமானந்தம் ஆசை வெறியில் அடுக்காக மொழிகளை அள்ளி வீசுகிறான். ஆப்போது அவள் கேவலம் நானொரு வேலைக்காரி' என்கிறாள். பரமானந்தம் விடவில்லை. “பூவிற்றால் பூக்காரி, பிச்சை எடுத்தால் இச்சைக்காரி, சிங்காரித்துக் கொண்டால் சிங்காரி; நீ வேலை செய்கிறாய் அதனால் வேலைக்காரி" என்று அடுக்குகிறான். 'அண்ணனுக்கு இளையவன் தம்பி, அக்காவுக்கு இளையவள் தங்கை என்பதைப் போல் 'இந்த வசனத்தில் என்ன புதுமை இருக்கிறது என்று அண்ணாவின் அடுக்கு மொழியைப் பரிகாசித்தவர்கள் உண்டு. ஆனாலும் ஒன்றுமில்லாமல் ஏதோ பெரிதாய்க் கண்டுபிடித்துச் சொல்வதால் ஒகோவென்று பேசும் ஒரு பாத்திரத்திற்கு இதைக்காட்டிலும் ஏற்ற உரையாடல் எப்படி எழுதுவது என்று கேட்கத் தோன்றுகிறது. கருத்துக்களை அழுத்தமாகத் தெரிவிப்பதற்காகப் பயனிலையை முதலிலும் எழுவாய் செயப்படு பொருள்களைப் பின்னரும் வைத்து எழுதுவது கவிஞர்களுக்குரிய கலைத் தொழில் கண்டான் கற்பினுக்கணியைக் கண்களால் என்று கம்பன் பாடும்போது அந்தத் தொழில் நேர்த்தியைக் கண்டு மயங்குகிறோம். அண்ணாவின் உரையாடல்களிலும் இந்தக் கம்ப நாடகம் தலை காட்டுகிறது. 'கவிஞன் என்ன கனல்கக்கும் கண்களுடன் கரத்தில் கட்டாளியுடன் வந்திருக்கிறானே என்று எண்ணுகிறாயா காவலனே: என்று சொர்க்கவாசலில் மதிவாணன் வேந்தன் வெற்றி வேலனிடம் பேசத் தொடங்குகிறான். இங்கே ககரம் அடுக்கப்படுவதும் எழுவாய் பயனிலை செயப்படுபொருள் இடப்பெயர்ச்சி செய்வதும் அழகாகவே இருக்கின்றன. காமிராதான் பேசவேண்டும் என்றும் பாத்திரங்கள் அதற்குத் துணையாக, அளவாக மிகக் குறைவாகப் பேசவேண்டும் என்றும் நம் திரைப்பட உலகம் தாமதமாகக் கண்டுபிடித்திருக்கிறது. இப்போது கூடியமட்டிலும் நீண்ட உரையாடல்கள் ஒதுக்கப்படுகின்றன. அண்ணாவின் வசனயுகத்தில் எவ்வளவு நீளமாக உரையாடல் இருக்கிறதோ அவ்வளவு வரவேற்பும் பாராட்டும் பெறும். அந்த யுகதர்மத்துக்கேற்ப அண்ணா நீண்ட உரையாடல்களை எழுதினார்.