பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் 133 'இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் ஈஸ்வரன் சம்பந்தம் வைப்பதில்லை:

சட்டம் ஒரு இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஓர்

விளக்கு. ஏழையால் அந்தப் பிரகாசமான விளக்கைப் பெற முடியாது’’. இவையெல்லாம் அண்ணாவின் திரை உரையாடல் வரிகள். இவை ஒவ்வொன்றும் பொன்மொழியைப் போல் பழமொழியைப்போல் இதயத்தில் குடிபுகுந்து விடுகின்றன. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடைவெளி சிறிதாக இருக்கவேண்டும், வழக்கிலுள்ள சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்னும் ரகசியம் அண்ணாவிற்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், பாரதி பாரதிதாசனைப்போல் பாமரர்களும் புரிந்து கொள்ளக்கூடிய எளிய தமிழை எப்போதும் கையாண்டார். ஒரு பாத்திரம் பேசும் வார்த்தையையோ கருத்தை யையோ வைத்து மற்றொரு பாத்திரம் பேசி முடிப்பது ஆஸ்கார்ஒயில்டு என்ற ஆங்கில எழுத்தாளரின் பாணி அண்ணாவின் உரையாடல்களிலும் அந்தப் பாணி இல்லாமல் இல்லை. வேலைக்காரி அமிர்தத்திடம் தன் மீது ஆசை இருக்கிறதா என்று வேதாசல முதலியாரின் மகன் மூர்த்தி கேட்கிறான். அவன் மீது அவளுக்கும் காதல்தான். ஆனால் அவள் நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசுகிறாள். பொறுமையிழக்கும் மூர்த்தி 'அமிர்தம் நீ குடத்தை துக்கிக் கிட்டு வளைந்து வளைந்து நடப்ப்ாயே, அது மாதிரி வளைந்து வளைந்து பேசுற"? - என்கிறான். 'பாரத்தைச் சுமக்க முடியாமல்தான் அப்படி நடக்கிறேன் அதே போல் நெஞ்சிலேயும் பாரம் இருந்தா நாக்கு வளையத்தானே செய்யும்: இது அமிர்தத்தின் பதில் கேள்வியும் பதிலும் கச்சிதமாய் ஒன்றோ டொன்று பின்னிப்பிணைந்து உறவாடுகின்றன.