பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 135 உலகத்தையும் பங்களாவில் வாழும் பணக்கார உலகத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறான். "இரண்டு உலகம் இருக்கு டாக்டர்...... இரண்டு. இருக்கு ஒண்ணை ஒண்ணு கேலி செய்துகிட்டு, விரோதிச்சிக்கிட்டு. காமம், குடி, களவு, கொலை, கலகம் யாவும் இரண்டு உலகிலேயும் உண்டு. உங்க உலகத்துச் சமாசாரம் வெளியே கலபத்திலே வராது. எங்க விஷயம் ஊர் பூரா பரவிவிடும். நாங்க மொத்தையிலே இருக்கற கண்ணாமாதிரி பொங்கி வழியிறது. உங்க உலகத்துக்கேத்த நடவடிக்கை சீசாவிலே ஊத்தி அனுப்புற ஒசத்தி சரக்கு மாதிரி" ரத்தினம் தன் பழக்க வழக்கங்களுக்கேற்ப வாழ்க்கை முறைக் கேற்ப கொச்சையாக அதேநேரத்தில் உண்மையாக உவகை நயம்படப் பேசுகிறான். அண்ணாவின் உரையாடல்களில் நகைச்சுவைக்கும் குறை வில்லை. வேலைக்காரியில் ஆனந்தன் கழுத்தில் கடன்காரன் கத்தி வைக்கும் கட்டம். 'இன்றைக்குக் காலையில்தானுங்க வச்சிருந்த காசையெல்லாம் காளிக்கு சுண்டல் செய்யக் கொடுத்துட்டேனுங்க என்கிறான் ஆனந்தன். என்னடா.... நான் தந்த கடனை கேட்டுக்கிட்டே இருக்கேன் நீ என்ன கிண்டலா பண்றே? நடடா, நீ வேலை செய்கிற இடத்துக்கு: உன் முதலாளிகிட்டே சொல்லி உன் சம்பளத்திலேயிருந்து கொடுக்கிறதாக இதிலே கையெழுத்துப் போடக் சொல்லுடா.... என்கிறான் கடன் கொடுத்தவன். 'இன்னைக்கு காலையில்தானுங்க என்னை வேலைக்கு வேண்டாம்னு துரத்திட்டாங்க இது ஆனந்தன் பதில், ஆனந்தன் தன் வேதனையில் மற்றவர்கள் விகடம் கான வைக்கிறான். இன்னொரு கட்டம்; பெண் பார்க்கும் படலம்: மாப்பிள்ளையின் வயதுபற்றி பெண் வீட்டில் பேச்சு நடக்கிறது.